அதிரை வாகன ஓட்டிகளின் பல நாள் பிரச்சனைக்கு கிடைத்தது தீர்வு (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம், போஸ்டாஆபிஸ் ரோட்டில் இருந்து ஈசிஆர் சாலை செல்லும் முக்கிய சாலையாக திலகர் தெரு சாலை உள்ளது. இந்த வழியாக 3 தனியார் மருத்துவமனையும் ஒரு அரசு மருத்துவமனையும், வலது புறமாக சென்றால் பேருந்து நிலையமும், இடது புறமாக சென்றால் ஒரு தனியார் மருத்துவமனையும், கடைத்தெருவும் உள்ளது.

இந்த வழி அதிகளவிலான பள்ளி வாகனங்களும் செல்லும் பாதையாக அமைந்துள்ளது. பல வழிகளுக்கு இந்த பாதை முக்கியமான ஒன்றாக கருதபடுகிறது. இந்நிலையில் இந்த பாதை கடந்த பல வருடங்களாக பழுதடைந்து பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி மக்களும் பலமுறை பேருராட்சி மன்றத்தில் நடவடிக்கை எடுக்க சொல்லியும் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில் தற்போது இங்கு சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக போன மாதம் ரோட்டை அளவு எடுத்து ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.

அதன் பின்னர் இரண்டாம் கட்டமாக இன்று பிஸ்மி மெடிக்கல் முதல் அரசு மருத்தவமனை வரை பழைய ரோட்டை பெயர்த்தெடுத்து பிறகு ரோலர் மூலம் அப்பாதையை சரிப்படுத்தி வருகின்றனர். மீதமுள்ள சாலை பணிகளை சீக்கிரமாக முடித்து தரமான சாலை அமைத்து தருமாறும் அப்பகுதி மக்கள் கேட்டுகொண்டுள்ளனர்.,ி

Close