அதிரையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில்  வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிரையிலும், கடந்த 4, 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பெய்ய தொடங்கிய இந்த மழை, இன்று காலை வரை விடாமல் சாரல் மழையாகவும் கனமழையாகவும் கொட்டி வருகிறது.

இதனால் அதிரையில் இன்று இமாம் ஷாபி பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காதிர் முகைதீன் பள்ளியில் நடைபெறுவதாக இருந்த சிறப்பு வகுப்புகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Close