குறிப்பு:இந்த சரணாலயம் அதிராம்பட்டினத்தில் இருந்து 80km தூரத்தில் உள்ளது .நேற்று அதிகமான வெயிலாக இருந்த காரணத்தால் பல விலங்குகளை பார்க்க முடியவில்லை.இந்த சரணாலயத்தின் இறுதியில் கோடியக்கரை கடல் வந்தடையும் அந்த புகைப்படங்களும் இணைக்கப்பட்டு உள்ளது. 

படங்கள் :காலித் அஹ்மத்































கோடியக்கரை வன விலங்கு சரணாலயம் செல்லும் வழியில் உள்ள பள்ளி


-(இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் கோடியக்கரை கடல் பற்றி சிறப்பு பார்வை)

Advertisement

' />

கோடியக்கரை வன உயிரினச் சரணாலயம் சிறப்பு பார்வை!(படங்கள் இணைப்பு)

வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை காவிரி கழிமுகப்பகுதி (டெல்டா)வில் கடற்கரைக்கு செங்குத்தாக அமைந்துள்ளது.இங்கிருந்த வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால கலங்கரை விளக்கம் 2004ஆம் ஆண்டு சுனாமியின்போது அழிபட்டது.

இங்குள்ள சதுப்புநிலக் காடுகள்,வேதாரண்யம் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன,கிழக்கு தக்காணத்தின் உலர்பசுமை காடுகளில் எஞ்சியிருப்பதாகும். கோடிக்கரை சரணாலயம் வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம், இரண்டுமே ஒன்றிணைந்ததாக கொண்டுள்ளது.

ஜீன் 13, 1967ஆம் ஆண்டு 24.17 சதுர கிமீ பரப்பில் அமைக்கப்பட்ட இதற்கு மேற்கே 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராஜாமடம் வரை சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகள் இரண்டு இடங்களில் உப்பங்கழிகளாக கடல் நீர் புகுந்து உப்பு ஏரியாக 30 கிலோ மீட்டர் நீளம் 5 கிலோ மீட்டர் அகலத்துக்கு நிற்கின்றது. இந்த உப்பு ஏரிகளில் முத்துப்பேட்டை, திருத்துறை பூண்டி மற்றும் மேல்மருதூர் பகுதியிலிருந்து மூன்று நதிகள் சங்கமம் ஆகின்றன.1988ஆம் ஆண்டு தலைஞாயிறு பாதுகாக்கப்பட்ட காடுகளையும் இணைத்து 377 சதுர கிமீ பரப்பிற்கு விரிவாக்கப்பட்டது. 

கோடியக்கரை, கோடியக்காட்டில் உள்ள உலர் பசுமைமாறாக் காட்டுப் பகுதி வன உயிரின, பாதுகாப்பு சரணாலயப் பகுதியாக திகழ்கிறது. இந்த சரணாலயத்தில் அரிய வகையான வெளிமான், புள்ளிமான் போன்றவை அதிக எண்ணிக்கையில் பாதுகாக்கப்படுகின்றன.

இவை தவிர, மட்டக் குதிரைகள், குரங்குகள், காட்டுப் பன்றி உள்பட பல வகையான காட்டு விலங்குகள் ஏராளமாக உள்ளன. இங்கு கடந்த பல மாதங்களாக மழை இல்லாததால் உலர் பசுமைமாறாக் காட்டுப் பகுதியில் வழக்கத்தைவிடவும் மோசமான வறட்சி நிலவுகிறது.

சில வகை மரங்கள் காய்ந்து பட்டுப்போகும் அளவில் காணப்படுகின்றன. மான்கள் போன்றவற்றுக்கு உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. வனப் பகுதிக்குள் காணப்படும் குட்டைகள் வறண்டுபோயுள்ளதால் விலங்குகள் பருக போதிய அளவு தண்ணீர் இல்லை. இதனால், வெளியிடங்ளில் இருந்து வனத் துறையினர் மூலம் டேங்கர் லாரிகளில் எடுத்து வரப்படும் தண்ணீர் காட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் ஊற்றப்படுகிறது. இவை விலங்குகளுக்கு போதிய அளவில் இல்லை. இதனால், தண்ணீருக்காக குதிரை, மான் போன்ற விலங்குள் பரிதவித்து வருகின்றன.

வனப் பகுதிக்குள் விலங்குகள் வழக்கமாக தண்ணீர் குடிக்கும் குளம், குட்டை தொட்டி என 56 இடங்கள் உள்ளன. இவற்றில் தற்போது முக்கிய இடங்களாகக் கருதப்படும் 16 இடங்ளில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றப்படுகிறது.இதுவரை மான்போன்ற விலங்குகள் வெளியேறாத அளவில் நாள்தோறும் 7,500 லிட்டர் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படுகிறது என்றார் அங்கு உள்ளவர் . 

குறிப்பு:இந்த சரணாலயம் அதிராம்பட்டினத்தில் இருந்து 80km தூரத்தில் உள்ளது .நேற்று அதிகமான வெயிலாக இருந்த காரணத்தால் பல விலங்குகளை பார்க்க முடியவில்லை.இந்த சரணாலயத்தின் இறுதியில் கோடியக்கரை கடல் வந்தடையும் அந்த புகைப்படங்களும் இணைக்கப்பட்டு உள்ளது. 


படங்கள் :காலித் அஹ்மத்

கோடியக்கரை வன விலங்கு சரணாலயம் செல்லும் வழியில் உள்ள பள்ளி

-(இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் கோடியக்கரை கடல் பற்றி சிறப்பு பார்வை)

Advertisement

Close