‘இஸ்லாமியருக்கும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் பொருந்தும்!’

இஸ்லாமியருக்கும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்துல் காதர் என்பவரின் 18 வயதிற்கு கீழ் உள்ள மகளுக்கு திருமணம் செய்ய பெரம்பலூர் நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்துல் காதர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘நாங்கள் இஸ்லாமியர்கள். எனவே, எங்களுக்கு குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பொருந்தாது’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, “குழந்தை திருமண தடுப்புச் சட்டம், மதபேதமின்றி அனைவருக்கும் பொருந்தும். குழந்தைகள் நலன் மற்றும் அவர்களின் முன்னேற்றமே முக்கியம். எனவே, இஸ்லாமியர் மட்டுமின்றி அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும்” எனக்கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

Advertisement

Close