சவூதி மன்னர் சல்மானின் ஆட்சியைக் கண்டு அஞ்சும் உலக ஏகாதிபத்திய நாடுகள்!

சவூதி அரேபியாவின் மன்னராக சல்மான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.
அதிலும் குறிப்பாக ஏமனை ஆக்கிரமித்த தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை இணைக்காமல் தனியாக அரபுப்படையை உருவாக்கி தீவிரவாத இயக்கத்தை நிர்மூலமாக்கியதிலிருந்தே சவூதி அரேபியாவுக்கு எதிரான பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஏமன் போரில் அமெரிக்காவை கழட்டி விட்ட சவூதி அரேபியாவை குளிரவைக்க சவூதி மன்னர் சல்மான் அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்த ஒபாமாவின் அழைப்பையும் சல்மான் ரத்து செய்த பிறகே இரண்டு குண்டுவெடிப்பு நடைபெற்றது.
இறைவனின் அருளால் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு 16 தீவிரவாதிகளை சுற்றி வளைத்து கைது செய்தது சவூதி காவல்துறை.
இந்நிலையில்…. சவூதி அரேபியாவை 300 கிமீ தொலைவில் தாக்கக்கூடிய மிஸ்ஸைல் (ஏவுகணை) ஒன்று ஏவப்பட்டுள்ளது. அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையை கொண்டு நடுவானிலேயே சவூதி ராணுவம் முறியடித்து மிஸ்ஸைலை முற்றிலுமாக நிலைகுலைய வைத்து விட்டது. சவூதி அரேபியாவின் இந்த அதிரடி ஆட்டம் ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வளவு காலமாக செல்வவளம் மிகுந்த முஸ்லிம் நாடுகளை கைக்குள் வைத்துக்கொண்டு முஸ்லிம் மன்னர்களுக்கு பெண்களையும், மதுவையும் வாரி இறைத்து எதற்கும் கவலைப்படாதீர்கள், உங்கள் மீது யாரேனும் கை வைத்தால் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், பணத்தை மட்டும் எங்களிடம் கொடுங்கள் என்று மன்னர்களை கொஞ்சம் கூட சிந்திக்க விடாமல், நாட்டின் எந்த துறையும் வளர்ச்சி இல்லாமல் சுகபோகம் அனுபவித்த மன்னர்களும் மக்களை சிந்திக்க விடாமல்….
முஸ்லிம் நாடுகளின் முழு செல்வங்களையும் கொள்ளையடித்த கொள்ளைக்கார கூட்டம் தன்னுடைய நாட்டை மட்டும் அறிவியல், தொழில்நுட்பம், விஞ்ஞானம், மருத்துவம், ராணுவம் என்று அனைத்து துறையிலும் உயர்த்திக்கொண்டது. ஈராக் அதிபர் சதாம் ஹுசைன், லிபியா மன்னர் முஅம்மர் கடாஃபி, எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி போன்ற ஐரோப்பிய நாடுகளை எதிர்க்கக்கூடிய அளவிற்கோ அல்லது இஸ்லாமிய ஈமான் தாரியாகவோ யாரேனும் இருந்து விட்டால் அவர்களையும் வீழ்த்தி விடுவது.
இதே அச்சத்தை ஏனைய நாடுகளின் மன்னர்களுக்கு கொடுத்து கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் செயலிழக்க செய்வது போன்ற அயோக்கிய நாடுகளுக்கு காலத்தின் சக்கரம் ஒரே மாதிரி சுழலாது அது ஓர் நாள் மாற்றியும் சுற்றும் என்பதற்கு….
தூண் இன்றி வான் அமைத்த தூயோனின் அருளால் சவூதி அரேபியாவின் மன்னராக சல்மான் அவர்களும், சவூதி அரேபியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக சல்மான் அவர்களின் மகன் முஹம்மது பின் சல்மான் அவர்களும் ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ளார்கள்.
காலத்தின் சக்கரம் ஒரே மாதிரி சுழலாது, ஓர் நாள் மாற்றியும் சுற்றும்….

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்
Close