அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற பட்டமளிப்பு விழா!(படங்கள் இணைப்பு)

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் 60 ஆம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்ச்சி இன்று (03-03-2105) காலை 10.30 கல்லூரியின் கலையரங்கில் துவங்கியது .இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பேரா.டாக்டர்.A.முஹம்மத் முகைதீன்(HOD Of English)அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் .மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டாக்டர்.K.கலா,M.Sc.,B.Ed.,M.Phil.,Ph.d.,(JOINT DIRECTOR OF COLLEGIATE EDUCATION) அவர்கள் கலந்து கொண்டார்கள் .

முன்னதாக MKN ட்ரஸ்டின் நிர்வாகி நீதிபதி K.சம்பத் அவர்கள்  தலைமையுரை நிகழ்த்தினார்கள் .இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்  டாக்டர்.K.கலா அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள் .பட்டமளிப்பு உறுதி மொழியினை கல்லூரியின் முதல்வர் டாக்டர். A.ஜலால் அவர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். 

இதனையடுத்து பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் 400க்கும் மேற்ப்பட்டோர் பட்டங்கள் பெற்றனர் .மாணவர்களுக்கு பட்டங்களை சிறப்பு விருந்தினர் திருமதி.டாக்டர்.K.கலா அவர்களும் ,நீதிபதி K.சம்பத் ஆகியோர் அளித்தனர் .இறுதியாக டாக்டர் M.சிக்கந்தர் பாஷா (Associate Professor Of English) அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள் .   

 இந்நிகழ்ச்சியில் ,முன்னாள் பேராசிரியர்கள் பெற்றோர்கள்,கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவிகள் ,அதிரை வலைதள நிர்வாகிகள் , பத்திரிக்கையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் . மேலும் பட்டம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அதிரை பிறை சார்ப்பாக வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

Advertisement

Close