அதிரை – சென்னை ரஹ்மத் பஸ் சேவை முற்றிலுமாக நிறுத்தம்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை பொதுமக்கள் கவனத்திற்கு 
அதிரையில் கடந்த இரண்டு வருடமாக அதிரையர்களால் உருவாக்கப்பட்ட ரஹ்மத் ரோடுவேஸ் நிறுவனத்தின் ஒரு ஆம்னி பேருந்து எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு உயிர் சேதம்,காயங்களும் ஏற்பட்டது அனைவரும் அறிந்த உண்மை.இனிவரும் காலங்களில் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க அல்லாஹ்  அனைவரையும் பாதுக்காப்பான.ஆமீன்.மேலும் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு  மன நிம்மதியையும்,காயம் அடைந்தவர்களுக்கு உடல் நலன் பெற அல்லாஹ்வுடன் துஆ செய்வோமாக.ஆமீன் 

எங்களுடைய ரஹ்மத் ரோடு வேஸ் நிறுவனத்தின் அதிரை சேவை முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது.காரணம் எங்களது நிறுவனத்தின் அதிரை சேவையை நிறுத்துமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களின் சிலர் தொடர் வற்புறத்தனினாலும்,மிரட்டனினாலும்,சில துண்டு பிரசுரங்களை வெளியிட்டு விபத்தை காரணம் காட்டி இல்லாத அவபெயர்களை ஏற்படுத்தி அதிரை பொதுமக்களிடையே எங்கள் மீது தவறான  எண்ணத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும்  எங்களது  பேருந்தில் முறையான ஆவணங்கள் இல்லை என்றும்,கடந்த கால ங்களில் எங்களது பேருந்தில் சிறிய பழுதுகள் ஏற்பட்டாலும் அதனை பெரிய விபத்துபோல் காரணம் காட்டி இணையதளங்களில் வெளியிட்டு வந்தனர். ஆகையால் ரஹ்மத் அதிரை சேவையை இன்று முதல் முற்றிலுமாக நிறுத்துகிறது.

ரஹ்மத் நிறுவனம் உருவாக்கிய நோக்கம் அதிரையர்கள் யாரும்  மோட்டார் தொழிலில் செய்ய  முன்வராத  நிலையில் அதிரை மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்ய இந்த பேருந்து தொழிலில் இறங்கினோம்,மேலும்  பொருளாதார நெருக்கடி இருந்தும் வட்டியின் பக்கம் செல்லாமல் அல்லாஹ்வின் உதவியால் செயல்பட்டோம்.  ஆனால் எதிர்பாராத விபத்தினை காரணம் காட்டி தொடர் மிரட்டல்களும்  எங்களது நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுக்கும் சிலராலும் மற்றும்  நிறுவனத்தின் மீது அவப்பெயர் எற்படுவதனாலும் எங்களது சேவை நிறுத்தப்பட்டது.அதிரை பொருத்தமட்டில் வெளியூர்காரர்கள் வந்து பிழைக்கலாம்.உள்ளூர் வாசிகள் பிழைப்பது கடினம் என்பதை இந்த இரண்டு வருடத்தில் நாங்கள்  நன்றாக தெரிந்து கொண்டோம்.   

அதிரையில் இனி வரும் காலங்களில் எங்களை போன்ற இளைஞர்கள் இந்த மோட்டார் தொழிலை உருவாகலாம்.அவர்களை உதாசினப்படுத்தாமல்  ஊக்குவிக்குமாறும் அன்புடன் கேட்டுகொள்கிறோம். மேலும் எங்களது நிறுவனத்திற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் தந்த தொழில் சார்ந்த நிறுவனங்களும் ,வியாபாரிகளும்,பொதுமக்களுக்கும் நன்றி மற்றும் சலாதினை தெருவித்து கொள்கிறோம். 

r ahmath Roadways
No 6/4, Jaffer Serang Street,
Near National Hospital
Chennai – 600 001
Phone : +91-44-2525 1021 | 1022  | 1023 
Fax :       +91-44-2525 1024
cell :       +91- 9840015690
Email: rahmathroadways@gmail.com 
Web : rahmathbus.com

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author