பட்டுக்கோட்டையில் பட்டையை கிளப்பி வரும் அதிரை AFFA மற்றும் SSMG அணிகள்!

தமிழ்நாடு கால்பந்து கழகம், தஞ்சாவூர் கால்பந்து கழகம் நடத்தும்  கால்பந்து லீக் தொடர் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அதிரை SSMG அணி பட்டுக்கோட்டை அணியை எதிர்த்து விளையாடியது. இதில் அதிரை SSMG அணி வீரர் புஹாரி ஒரு கோல் அடித்ததன் மூலம் 1-1 என்ற கோல் கணக்கில் ட்ராவில் முடிந்தது.

அது போல் இன்று நடைபெற்ற மேலும் ஒரு ஆட்டத்தில் அதிரை AFFA அணி பட்டுக்கோட்டை விவேகானந்தர் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் AFFA அணி வீரர்கள் அஷ்ரப், தாரிக் தலா ஒரு கோல் அடித்து 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.

தொடர் வெற்றியை குவித்து வரும் அதிரையை சேர்ந்த இரு அணிகளுக்கும் அதிரை பிறையின் பாராட்டுக்களைப் தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement

Close