இதுக்கெல்லாம் ரெடியா? அப்டின்னா கிரெடிட் கார்டு வாங்கிக்கோங்க!(விழிப்புணர்வு பக்கம்)

இப்பல்லாம் கிரெடிட் கார்டு வாங்குவது ரொம்ப ரொம்ப ஈஸி. உங்களுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ, ‘கிரெடிட் கார்டு வாங்கிக்கோங்க சார்’ அப்டின்னு தினமும் குறைந்தது ஒரு வங்கியில் இருந்தாவது உங்களுக்கு போன் வரும். 

வேண்டாம்னு சொன்னாலும் விட மாட்டாங்க. அந்த ஆஃபர், இந்த ஆஃபர்னு சொல்லி ஒரு கிரெடிட் கார்டையாவது நம்ம தலையில் கட்டி விடலாம்னுதான் பார்ப்பாங்க. இதுல சில்வர், கோல்டு, ப்ளாட்டினம்னு வெரைட்டி வெரைட்டியா கார்டு கொடுப்பாங்க. நாம் ஓ.கே. சொல்லிட்டோம்னா நம்ம வீட்டுக்கே கிரெடிட் கார்டு வந்து விடும்.

அந்த ஆஃபர், இந்த ஆஃபர் வங்கிகள் தரும் ஆஃபருக்கு மயங்கி நாமும் ஒரு வழியாக ஒரு கிரெடிட் கார்டை வாங்குவது பெரிதில்லை. அதை புத்திசாலித்தனமாக நாம் யூஸ் பண்ணலைன்னா நம்ம பொழப்பு திண்டாட்டம்தான். ஆனால் இது வங்கிகளுக்கோ நல்ல கொண்டாட்டம்.

டிப்ஸ் கிரெடிட் கார்டை எப்படி புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது? இதோ சில வழிகள். இவற்றைக் கடைப்பிடித்தால் நமக்கு கிரெடிட் கார்டு லாபந்தான்!

லேட் பேமண்ட் ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி செலவு செய்யும் தொகையை நாம் திருப்பிச் செலுத்த அதிகபட்சம் 45 நாட்கள் வரை வட்டி இல்லாத காலக்கெடு கிடைக்கும். அதைத் தவறவிட்டால் மாதா மாதம் வட்டி எகிறும். உஷார்!

கிரெடிட் லிமிட் கிரெடிட் கார்டு மூலம் ஒவ்வொரு மாதமும் இவ்வளவுதான் பர்ச்சேஸ் செய்ய முடியும் என்று ஒரு லிமிட் உள்ளது. அதற்கு மேல் செலவு செய்தால், மறுபடியும் வட்டி என்னும் அரக்கன் உங்கள் வங்கிச் சேமிப்பைப் பதம் பார்த்து விடுவான்.

ஆண்டுக் கட்டணம் கிரெடிட் கார்டு வாங்கச் சொல்லித் தூண்டும் சில வங்கிகள், அதற்கான ஆண்டுக் கட்டணம் குறித்து சரியாகச் சொல்ல மாட்டார்கள். பெரும்பாலும் முதல் ஆண்டுக்கு மட்டும் கட்டணம் இருக்காது. அதுக்கு அப்புறம் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் தீட்டி விடுவார்கள். எனவே இது குறித்து தெளிவாகக் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

கிரெடிட் ரேட்டிங் மாதா மாதம் நீங்கள் குறித்த தேதிக்குள் கிரெடிட் தொகையைக் கட்டாவிட்டால், அது உங்கள் கிரெடிட் ரேட்டிங்கைப் (கிரேடிட் ஸ்கோர்) பாதித்துவிடும். அதாவது, லோன் உள்ளிட்ட பல சலுகைகளும் கிடைக்காமல் போய்விடும்.

ஆணியே பிடுங்க வேணாம்! ‘தேவை இல்லாமல் எதற்கு செலவு செய்யணும்? பிறகு ஏன் அதைக் கட்ட முடியாமல் வட்டி கட்டி அவதிப் படணும்?’ என்று நினைக்கிறீர்களா? அப்டின்னா கிரெடிட் கார்டுக்கே ஒரு ‘குட் பை’ சொல்லிடுங்க!

Advertisement

Close