பணத்தாசைக் கொண்ட அதிரையர்களின் கவனத்திற்கு!

வெளிநாட்டில் வேலை செய்து சம்பளம் பெறுவோர் அவ்வளவு எளிதில் நாடு திரும்பி விடுவதில்லை. ஆனால் ஒரு சிலர் குறுகிய காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக அல்லது தவறான வழியில் சம்பாதித்து நாடு திரும்பி வந்ததும், ஊரில்  மாளிகை போன்ற பெரிய வீட்டையும் , பெரிய காரையும் அந்த திருட்டுப்பணத்தின் மூலம் விலைக்கு வாங்கி வாழ்ந்துவரும் இந்த கேவலக்கெட்ட நாற்றபிடித்த வாடை வெளியே தெரியாமல் இருக்க  நறுமணங்களை உடல் முழுவதும் பூசி ஆடம்பர வாழ்க்கை வாழ்வது போல நடித்து வருகின்றனர்.
குறிப்பாக பணம் கையாளும் நபர்களில் ஒரு சிலர் என்றாவது ஒரு நாள் அதிக பட்ச பணம் கையில் வரும் போது, மனம் ஊசலாடினால் அப்பணத்தை ஆட்டையப்போட்டு நாட்டிற்கு ஓடி வந்து விடுகின்றனர் .
இதை போன்ற திருட்டு வேலையில் அதிரையினர் பலர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது மிகையாகாது.ஒன்றை மற்றும் சொல்கிறோம் நீங்கள் அந்த பணத்தை வைத்து இங்கு மட்டும் தான் சொகுசு வாழ்க்கை வாழ முடியும் .மரணத்துக்கு பின் ஒரு வாழ்க்கை நமக்கு இருக்கின்றது . இறைவனை அஞ்சி கொள்ளுங்கள்.
ஆக்கம்: இர்ஷாத் பின் ஜஹஃபர் அலி

Advertisement

Close