DR.PIRAI-பீட்ரூட் கிழங்கின் மருத்து நன்மைகள்!





பீட்ரூட் கிழங்கின் மருத்து நன்மைகள்:


அல்சர்:- அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு,தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும்.

சிறுநீரக சுத்திகரிப்பு:- பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன்கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில்தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி, சுத்தமாக இருக்கும்.

மூலநோய்:- மூல நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கசாயம் போட்டுகுடித்தால், குணமாகிவிடும்.

இரத்த சோகை:- பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால்,இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

புற்றுநோய்:- தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களைஅழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம்:- உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்,பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக்கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

கொலஸ்ட்ரால்:- நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில்தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

செரிமான பிரச்சனை:- செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட்ஜூஸை குடித்தால், செரிமானப் பிரச்சனை நீங்கும்.

சிவப்பணுக்கள் அதிகரிக்கும்:- பீட்ரூட்டை, எலுமிச்சை சாற்றில்நனைத்து பச்சையாக சாப்பிட்டால், இரத்தத்தில் சிவப்பணுக்களின்உற்பத்தி அதிகரிக்கும்.

மறதி:- பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்தால், மூளையில் இரத்தஓட்டமானது அதிகரித்து, முதுமை மறதி (Dementia) மற்றும் ஞாபகமறதியை (Alzheimer) தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில்நிரூபிக்கப்பட்டுள்ளது.

சரும அரிப்பு:- சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்புஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட் சாற்றுடன்,படிகாரத்தை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால்,உடனே அரிப்பு அடங்கிவிடும்.

தீப்புண்:- கையை தீயில் சுட்டுக் கொண்டால், அப்போது பீட்ரூட்சாற்றினை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண்கொப்புளமாகாமல் சீக்கிரம் குணமாகும்.

பொடுகு:– பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள்,வினிகரை பீட்ரூட் வேக வைத்த நீரில் கலந்து, தலைக்கு தடவி ஊறவைத்து குளித்தால், பொடுகைப் போக்கிவிடலாம்.

தினசரி அடிப்படையில் உடனடியாக ரத்தக் கொதிப்பு ஏற்பட்டு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதா பீட்ரூட் ஜூஸ் ஒரு கிளாஸ் அடியுங்கள் சரியாகிவிடும் என்கிறது ஆஸ்ட்ரேலிய ஆய்வு ஒன்று.

இதனை ஆய்வு செய்தவர்கள் பேக்கர் ஐடிஐ இருதயம் மற்றும் சர்க்கரை நோய் மையமாகும் இது ஆஸ்ட்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளது.
சிலர் உயர் ரத்த அழுத்தம் இருக்கும்போது பீட்ரூட் ஜூஸ் அருந்தியுள்ளனர். உடனடியாக 4 முதல் 5 பாயிண்ட்கள் ரத்த அழுத்தம் குறைந்ததை கண்கூடாகக் கண்டுள்ளனர்.

ஒரேயொரு டோஸ் பீட்ரூட் ஜூஸில் ஏற்பட்டுள்ள இந்த ரத்த அழுத்தக் குறைவு ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.எனவே தினசரி அடிப்படையில் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் நீண்ட நாளைய ரத்த அழுத்தமும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பீட்ரூட்டில் மேலும் வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்து, ஆகியவை உள்ளதோடு, நைட்ரேட் அளவும் அதிகமிருப்பதால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது.

Advertisement

Close