அதிரை புதிய மெயின் ரோட்டில் நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவர் காயம்!

அதிரை மெயின் ரோடு ஹனீப் டாக்டர் மருத்துவமனை எதிரே வேகமாக வந்த இருசக்கர வாகனம் அதிரையை சேர்ந்த பள்ளி மாணவர் மீது மோதியது இதில் மாணவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் மாணவனுக்கு  காயம் ஏற்பட்டு அருகில் உள்ள டாக்டர்.ஹனீப் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் மது அருந்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

அதிரையில் வேகத்தடை இல்லாத தரமான சாலை அமைக்கப்பட்டுள்ள பிறகு இளைஞர்களும் வாகன ஓட்டிகள் பலரும் அதி வேகத்தில் இப்பகுதியில் செல்வதை காணமுடிகிறது. இதனால் விபத்துகள் நடைபெறுவது தொடர் கதையாகிறது. 

Advertisement

Close