அதிரையில் ஆலிம்-ஐ காணவில்லை!

அதிரை காலியார் தெருவை சேர்ந்தவர் முஹம்மது இஸ்மாயில், இவரின் மகன் ஜமால் முஹம்மது (38). இவர் சற்று உடல் நிலை பாதிப்படைந்து காணப்பட்டார். இவர் நமதூர் ரஹ்மானியா மதரஸாவில் ஆலிம் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அவர்களது உறவினர் கூறுகையில் :
இவர் இன்று மதியம் மருத்துவ சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை சென்றார், இதுவரையிலும்  ஊர் திரும்பவில்லை. நாங்கள் பல்வேறு இடங்களில் தேடி வருகிறோம் என்றார் .
இவரை பற்றிய தகவல் கிடைத்தால் 7418596423 என்ற தொலைபேசி எண்ணில் உடனடியாக தொடர்புகொள்ளவும். இன்ஷா அல்லஹ் இவர் கூடிய விரைவில் கிடைத்திட துஆ செய்யுங்கள்.
தகவல்: அபுதாஹிர்

Advertisement

Close