அதிரையில் குறைந்த விலையில் விற்பனையாகும் வீட்டு அலங்கார செடிகள்!(படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் பாரி மளிகை கடை எதிரில் வீட்டை  அலங்கரிக்கும் வண்ண செடிகள் ,பழ வகை கண்டுகள் மிக குறைந்த விலையில் விற்கப்படுகின்றன .இந்த செடிகள் ரூ.15 முதல் 20 ரூபாய் வரையிலும் பெரிய வகை செடிகள் ரூ.30 முதல் 40 வரை மற்றும் விற்கப்படுகிறது .

இதுகுறித்து உரிமையாளர் செல்லமாள் அவர்கள் நம்மிடம் கூறுகையில்:

நான் புதுக்கோட்டை கள்ளுக்குடி இருப்பு பண்ணையில் இருந்து வாங்கி வந்து விற்கிறேன்.எங்களிடம் வீட்டை அலங்கரிக்கும் ரோஜா பூ,மல்லியா பூ,குச்சி பூ,நந்தியா வட்டை பூ, கலர் செம்பருத்திகள் இன்னும் பல வகையான வண்ண செடிகள் இருக்கிறது என்றார். மேலும்  பழ வகைகள் கொய்யா ,பலா ,நெல்லி மாங்கண்டு போன்றவைகள் குறைந்த விலையில் கிடைக்கும் என்றார்.

Advertisement

Close