அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற விளையாட்டு விழா நிகழ்ச்சி!(படங்கள் இணைப்பு)

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் 60 ஆம் ஆண்டு விளையாட்டு விழா இன்று  (26-02-2015) காலை கல்லூரியின் மைதானத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து வைத்தார்கள். 

கல்லூரியின் மாணவ மாணவிகள் வழங்கிய அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டாக்டர்.V. கருணாநிதி (மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அலுவலர்) ஏற்றுக்கொண்டு வாழ்த்துரை ஆற்றினார்கள்.மேலும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் டாக்டர்.R.ராஜமாணிக்கம் அவர்கள் ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்தார்கள்.காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

இதைதொடர்ந்து மாணவ மாணவிகள் , அலுவலக  பணியாளர்கள்,முன்னாள் மாணவர்கள் நாட்டு நலப்பணிதிட்டம் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினார்கள் . முன்னதாக இந்த ஆண்டியில் காதிர் முகைதீன் கல்லூரி நிகழ்த்திய சாதனைகளை உடற்கல்வி இயக்குனர் முருகானந்தன்  ஆண்டறிக்கையாக வாசித்தார்கள் .

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், அலுவலக பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



செய்தி மற்றும் படங்கள்:
காலித் அஹ்மத் 

Advertisement

Close