அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கவிதை போட்டி!(படங்கள் இணைப்பு)

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் வைர விழாவை முன்னிட்டு பட்டுக்கோட்டை வட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு மற்றும் கவிதை போட்டி இன்று (25-02-2015) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர்  ஏ.ஜலால் அவர்கள் தலைமையுரை ஆற்றினர்கள்.காதிர் முகைதீன் கல்லூரி துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.முன்னதாக தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஏ. கலீல் ரஹ்மான் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் .மேலும் போட்டிகளின் விதிமுறைகளை தமிழ் துறை பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள் .

இந்த போட்டிகளில் 15 க்கும் மேற்ப்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன . இதில் பேச்சு போட்டிக்கான தலைப்பு “இனியொரு விதி செய்வோம்” என்றும்  , கவிதை போட்டிக்கான தலைப்பு தாய்மை என்று வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட மாணவர்கள் தனது திறமைகளை வெளிப்படுத்தினர்.  கல்லூரியை  சேர்ந்த பேராசிரியர்கள் போட்டியின் நடுவராக இருந்தனர் .

இதனை தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் கல்லூரியின் ஆண்டு விழா அன்று வழங்கப்படும் .இறுதியாக தமிழ்துறை பேராசிரியர் சாபிரா பேகம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள் .      

Advertisement

Close