Advertisement

' />

அதிரை மக்களே! நாம் என்றுதான் திருந்தப் போகிறோம்!

அதிரை எப்பொழுதுமே கட்டுமானப் பணிகளில் பிசியான ஊர். தெருவிற்கு ஒரு வீட்டிலாவது கட்டுமானப் பணிகள் நடந்துக்கொண்டுதான் இருக்கும். அதிகரித்து வரும் மக்கள் தொகை பெறுக்கத்தின் காரணமாக ஊர் எல்லைகள் நீண்டு கொண்டு தான் உள்ளன. மக்களும் புதிய வீடுகளை தொடர்ந்து கட்டிக்கொண்டு உள்ளனர். இப்படி கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் வீட்டு வேலைகளுக்காக ஜல்லிக் கற்கள், மணல் போன்றவற்றை வாங்கி வீட்டு வாசலில் குவித்து வைக்கின்றனர்.

இப்படி அளவிற்கு அதிகமாக வாங்கப்படும் மணலும், ஜல்லிக்கட்டு கற்களும் வீட்டு வேலைகள் முடிந்தும் மாதக் கணக்கில் வீட்டு வாசலில் தேங்கி கிடக்கின்றன. இந்த பொருட்கள் சில நாட்களில் நடுரோட்டிற்கு வந்து விடுகின்றன. இதனால் சாலைகள் சேதமடைவது மட்டுமல்லாமல் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும் வாகனங்களில் செல்பவர்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்வோர்கள் இது போன்று சாலையில் கிடக்கும் கட்டுமான பொருட்களால் கிழே விழுந்துவிடுகின்றனர். நான்கு சக்கர வாகனங்கள் இதனால் அந்த சாலை பக்கமே வரமுடிவதில்லை.

எனவே தங்கள் வீடுகளில் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் மக்கள் மணல் மற்றும் ஜல்லிகள் சாலையில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தடுப்பு ஏற்படுத்திக் கொள்ளுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

செய்தி: நூருல் இப்னு ஜஹபர் அலி
படங்கள்: இர்ஷாத் பின் ஜஹபர் அலி

Advertisement

Close