அதிரை அருகே ஏழை குழந்தைகளுக்கு அதிமுக வினரால் வழங்கப்பட்ட அன்னதானம்!(படங்கள் இணைப்பு)

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (பிப்.24) தமிழகத்தில் அக்கட்சியினர் ஏழைகளுக்கு திருமணம், அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகளை சில நாள்களாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை 8.00 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே ஒன்று கூடிய அ.தி.மு.கவினர் கட்சி கொடியேற்றி  அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.மேலும் இதனை தொடர்ந்து இன்று மதியம் 12.30pm அன்னதானம் நிகழ்ச்சி ராஜாமடம் ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா அனாதை ஆசிரமத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் பிச்சை , நகர துணைச்செயலாளர் M.A.முஹம்மத் தமீம் , வார்டு கவுன்சிலர் அபூதாகிர், அப்துல் லத்தீப், சேனா மூனா ஹாஜா முகைதீன், சிவக்குமார், ரவிக்குமார்,அதிமுக நிர்வாகிகள்,உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

செய்தி மற்றும் படங்கள்:
முஹம்மத் பிலால் 

Advertisement

Close