அதிரையரின் திறமையை கண்டு வியக்கும் இந்திய அரசியல் தலைவர்கள்!

அதிரை காலியார் தெருவை சேர்ந்தவர் பாருக் (கம்பியூட்டர் பாருக்).

இவர் பல வருடங்களாக அரசியல் தலைவர்களுக்கு பொருளாதாரம் மற்றும் அரசியல் சம்மந்தமான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். முன்னால் இந்திய பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்க், முன்னால் உள்துறை அமைச்சர் ஷுசில் குமார் ஷின்டே, திரு.ப.சிதம்பரம், திரு.ராகுல் காந்தி, திரு.குலாம் நபி ஆசாத் போன்ற தேசிய காங்கிரஸ் தலைவர்களுக்கும், திரு.ஜி.கே.வாசன், திரு.ஞானதீசிகன், திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திரு.தங்கபாலு போன்ற தமிழக அரசியல் பிரமுகர்களுக்கும் இவர் தன்னுடைய அரசியல் மற்றும் பொருளாதார நுணுக்கங்களைப் பற்றிய ஆலோசனைகளையும் தன்னுடைய யோசனைகளையும் பல வருடமாக கடிதம் மூலம் அனுப்பி வருகிறார்.

இதை படித்து பார்த்த தலைவர்களும்  இவருக்கு பதில் கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளனர். இவர் திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கும், திரு.ப.சிதம்பரம் அவர்களுக்கும் ரயில்வே தொடர்பாக கடிதம் மூலம் வழங்கிய ஆலோசனை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறுகிறார்.

இவர் திரு.மன்மோகன் சிங், நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம், அவர்களுக்கும் காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் திரு.ராகுல் காந்தி, அவர்களுக்கும் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து பல முறை ஆலோசனை எழுதியுள்ளார்.

1990 ம் ஆண்டு முதல் ரயில்வே நிர்வாகத்துக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இது போல தங்கம் விலை உயர்வு, இலங்கை தமிழர் பிரச்சனை, ஆசிட் வீச்சு, பாஸ்போர்ட், காமென்வெல்த் மாநாடு தொடர்பான ஆலோசனை போன்ற பல ஆலோசனைகளை தேசிய தலைவர்களுக்கு கடிதம் மூலம் அனுப்பி வருகின்றார்.

19/06/2013 முதல் இவர் கொஞ்சம் கொஞ்சமாக 26 பக்கங்களில் அரசியல், ஆன்மீகம் பொருளாதாரம் பற்றி நோட்டிஸ் வெளியிட்டுள்ளார். மேலும் வெளியிட்டுள்ளார. அந்தவகையில் இந்த வாரம் இரயில்வே குறித்த முக்கிய யோசனைகளை நோட்டிஸாக அதிரையில் வெளியிட்டு அதனை பிரதமர், ரயில்வே அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோருக்கிடையில் இந்த கடிதத்தை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மனுவினை RIGHT CLICK செய்து டவுண்லோட் செய்து படிக்கவும்.

Advertisement

Close