அதிரை அருகே உள்ள அபு பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழா!(படங்கள் இணைப்பு)

அதிரை அருகே உள்ள புதுப்பட்டினம் அபு பள்ளியில் 12 வது ஆண்டு விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது.இந்த பள்ளி தொடங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன இந்த பள்ளியில் பல ஊர்களிலிருந்தும் பல மாணாவர்கள் கல்வி கற்று வருகின்றனர் வருடா வருடம் இங்கு ஆண்டு விழா சிறப்பிக்கப்பட்டு வருகிறது அதுப்போன்று தனது 12 வது ஆண்டு விழாவை சிறப்பித்தது .இதில் சிறப்பு அழைப்பாளராக பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுயம்பரக்காசம் B.SC BL ,மற்றும் நந்தகோபாலன் MA,BL ஆகிய இருவரும் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்த விழாவில் பொதுமக்களும்,பெற்றோருகளும் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்,பள்ளியில் விளையாட்டுவிழாவில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கும் போட்டியில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்க விழா சிறப்பாக நடைப்பெற்றது.
இந்த பள்ளி கல்வியில் வளர அதிரை பிறை தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .

நன்றி:TIMES OF MALLIPPATTINAM

Advertisement

Close