முத்துப்பேட்டை தர்கா கந்தூரி ஊர்வலத்தில் ரகளை செய்த வாலிபர்கள் கைது!

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி ஊர்வலம் நேற்று முன்தினம் நடைப்பெற்றது. அப்போது ஊர்வலத்தில் சென்ற முத்துப்பேட்டையை சேர்ந்த அப்துல் முத்தலிப் மகன் வாசிம் கான் (22), சர்புதின் மகன் முகமது மாஜித்(19), பசீர் அகமது மகன் நசீர்(20), முகமது அலி மகன் ஜாபர் சாதிக்(20) ஆகியோர் கந்தூரி ஊர்வலம் ஜம்புவானோடை சிவராமன் நினைவு அருகே வரும் போது ஊர்வலத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ரகளை செய்து சத்தம் போட்டனர்.

இதுக்குறித்து ஜம்புவானோடை கிராம நிர்வாக அலுவலர் ராஜராஜசோழன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து 4-வாலிபர்களையும் கைது செய்தார்.
நன்றி :MUTHUPETTAI BBC

Advertisement

Close