அதிரையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கும் விளையாட்டுப் போட்டிகள்!

தற்பொழுது மார்ச் மாதம் நெருங்கி விட்டது. மார்ச் மாதம் என்றால் நம் அனைவரின் சிந்தனைக்கும் வருவது பொதுத்தேர்வுகள் தான். மார்ச் மாதத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இது தான் அந்த மாணவர்களின் கல்வியில் திருப்புமுனையாக உள்ள இந்த தேர்வுகளாக அந்த மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு விதமான உழைப்புகளை செய்துள்ளனர். இவர்களின் உழைப்புக்கான பிரதிபலன் அந்த தேர்வுகளின் முடிவில் தான் உள்ளது.

இது ஒருபுறமிருக்க தற்போது அதிரையில் விளையாட்டு போட்டிகளும் நடைபெற துவங்கியுள்ளது. இந்த விளையாட்டு போட்டிகளில் இந்த ஆண்டு பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களும் கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றனர். சில மாணவர்கள் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வ மிகுதியால் பள்ளிகளுக்கு கூட வராமல் விளையாட செல்கின்றனர். இந்த தேர்வுகளில் தான் அவர்களின் எதிர்காலம் உள்ளது, இப்படி இருக்க தங்கள் பிள்ளைகளும் மாணவர்களும் தங்கள் கவனத்தை விளையாட்டுப் போட்டிகளின் மீது கவனம் செலுத்துவது கவலை அளிப்பதாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது நடைப்பெற்று வரும் உலகக் கோப்பை போட்டிகளில் தங்கள் மாணவர்களின் கவனம் சிதறும் நிலையில் அதிரையில் இது போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்ட இருப்பதால் மாணவர்களின் கவனம் சிதறும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.

எனவே அரசு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த பிற்கு இது போன்ற போட்டிகளை நடத்துமாறு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாகவும் அதிரை பிறை சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

-நூருல் இப்னு ஜஹபர் அலி

Advertisement

Close