அதிரையில் நடைபெற்ற கைப்பந்து தொடரை கைப்பற்றியது WSC அணி! (படங்கள் இணைப்பு)

அதிரை ஆசாத்நகர் (தரகர் தெரு) ஜும்மா பள்ளி மைதானத்தில் மெ.மு.முகமது சஹிது,S.S.M.குல் முகம்மது இவர்கள் நினைவாக ASC நடத்திய மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நேற்று இரவு துவங்கியது. இதில் பல அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இன்று காலை நடைப்பெற்ற இத்தொடருக்கான இறுதிப்போட்டியுல் அதிரை WSC அணியும் காசாங்காடு அணியும் மோதின. இதில் அதிரை WSC வெற்றி பெற்று சுழற் கோப்பையை கைப்பற்றியது. இந்த அணி கால்இறுதிப்போட்டியில் ADIRAI FRIENDS அணியையும், அரையிறுதி போட்டியில் காரைக்கால் அணியை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற அதிரை WSC அணிக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement

Close