சவூதி அரேபியாவில் 5 ஆண்டுகள் அதையும் தாண்டி 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களா நீங்கள்?

வளைகுடா வாழ் குறிப்பாக சவூதி அரேபியாவில் பணியாற்றும் சொந்தங்களுக்கு! 

உங்களுக்குத் தெரியுமா?

சவூதி அரேபியாவின் தட்ப வெட்ப சீதோசன நிலை மாற்றங்கள் மற்றும் சுற்றுப்புற சூழல் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்களா?
இந்த ஆண்டு குறிப்பாக கடந்த சில மாதங்களில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உடன் களப்பணியாற்றிய சகோதரர்கள் என்று அதிகமான பேர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போய் உள்ளனர்.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. அல்-குர்அன்: 3:185

உங்கள் உடல் நலனை மாதம் ஒரு முறை அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

சவூதியின் தட்பவெட்ப நிலைப்படி காற்றில் ஈரப்பதம் குறைவு, அடுத்ததாக காற்றில் பிராண வாயும் குறைவு அதன் காரணமாக அதிகமானவர்களுக்கு அலர்ஜி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. சாப்பிடும் உணவு வகைகளில் அதிகமாக பதப்படுத்தப்பட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகள் இதனால் நீண்ட காலம் சவூதியில் பணியாற்றியவர்களுக்கு கொலஸ்ட்ரால், ரத்தக் கொதிப்பு, சுகர் என்று எதாவது ஒன்று அன்பளிப்பாகக் கிடைத்திருக்கும்.

இதை ஆரம்ப கட்டத்தில் கவனிக்காமல் இருந்துவிட்டு பாதிப்பின் கடைசியில் கவனிக்கும் போது அந்த நோய் தனது வீரியத்தோடு எல்லையை தாண்டியிருக்கும்.
சகோதரர்களே! வெளிநாட்டில் வேலை செய்யும் அனைவரும் எதாவது ஒரு வகையில் மன இருக்கத்துடனேயே இருக்கிறார்கள் ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம் அதுவும் குடும்பத்துடன் இருப்பவர்களாக இருக்கும். பிரச்சனைகளின் போது இருக்கமான மனநிலையிலிருந்து விடுபட முயற்சியுங்கள். அந்த பிரச்சனையை மறந்து அடுத்த வேலையில் கவனம் செலுத்துங்கள்.

மன இருக்கத்தின் போது உடனே தொழுகையை நாடுங்கள்… உங்கள் மனதில் உள்ள குறைகளை சுமைகளை இறைவனிடம் கேளுங்கள் முறையிடுங்கள். மனச்சுமையிலிருந்து விடுதலை பெறுங்கள்…
உங்களை நம்பி உங்கள் உறவுகள் காத்திருக்கின்றன.
மாதம் தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்து உங்களின் உடல் நலனை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உணவு பழக்கவழக்கங்களில் கட்டுபாடு வைத்துக் கொள்ளுங்கள். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

பரக்கத் நிறைந்த பேரிச்சை, ஆலிவ், தேன் போன்ற உணவுகள் தாராளமாக கிடைக்கும் நாடு இது அவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 

தகவல்: ஹூஸைன்கனி

Advertisement

Close