சிந்திக்காமல் வாட்ஸ் ஆப்பில் சேர் செய்யும் சகோதரர்களே!

” எனதருமை சமுதாயமே “

” சிந்திக்க மாட்டீர்களா “

ஒரு பெண் படத்தை போட்டு இவர் விபத்தில் கண்பார்வை இழந்து விட்டார்

பலலட்சம் செலவாகும் இதை வாட்சப் நிறுவனம் கொடுக்குதாம்.?

இவருக்கு உதவுவதற்கு இவரது படத்தை வாட்சப்பில் சேர் செய்தால் போதும் ஒவ்வொரு சேர்க்கும் பத்து பைசா வாட்சப் நிறுவனம் கொடுக்கும் என்று

ஒரு ஆடியோவும் ஒரு பெண்ணின் போட்டோவும் வலம் வருகிறது 
வாட்சப்பிலும் டெலிஹிராமிலும்

சிந்திக்க தெரிந்த சமுதாயமே எந்தவித ஆதாரமும் இல்லை தொடர்பு எண்களும் இல்லை எந்த தைரியத்தில் நீங்கள் இப்பெண் படத்தை அதிகமாக பரப்புகிறீர்கள்

வரக்கூடிய செய்தியின் உண்மை தன்மையை ஆராய்ந்து சேர்செய்யுங்கள் தயவு செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடாதீர்ள்

தயவு செய்து இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை பரப்பாதீர்கள்

Advertisement

Close