துபாயில் அப்துல் பாசித் புஹாரி அவர்களை ஆசிரியராக கொண்டு இஸ்லாமிய பாடத்திட்டம்!

Al Manar Basic Diploma in Islamic Studies- Start’s From Next Week 27th Feb’2015

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் வ பரகாதுஹூ, 

நாம் திட்டமிட்டபடி இன்ஷா அல்லாஹ் நமது இரண்டாம் பாடத்திட்டம் இந்த மாதம் 27-02-2015  இறுதி வாரத்தில் இருந்து தொடங்க உள்ளது ,அதன் விவரங்கள் பின்வருமாறு :-

بسم الله الرحمن الرحيم

Al Manar Basic Diploma in Islamic Studies

கால அளவு :- 6 மாதம்(3+3)

நேரம்  :- பிரதி வெள்ளிக்கிழமை காலை 7.00 முதல் 8.00 மணி வரை 

இடம் : அல் மனார் சென்டர், அல் பரஹா

ஆசிரியர் : மௌலவி அப்துல் பாஸித் புஹாரி 

பயிற்று மொழி : தமிழ் 

திட்டங்கள் :-

*120 மாணவர்கள் மட்டுமே அனுமதி ,

* முன்பதிவு கட்டாயம்,

* அனைத்து தர கல்வியுடைய  மக்களுக்கும் ஏற்ற பாடத்திட்டம் , ஆண் பெண் இருவருக்கும் தனித்தனி இட வசதி.

பாடத்திட்டம் பற்றி :-

*அரபி மொழியுடன் இஸ்லாமிய அடிப்படை கல்விகளை தெளிவான குர்ஆன்  மற்றும் சுன்னாவின் ஆதாரங்களுடன் விளக்க கூடிய எளிய  பாடத்திட்டம் .

*இஸ்லாமிய கல்வியாளர்களால் ஏற்றுகொள்ளபட்ட 
பாடப் புத்தகங்களை கொண்டும், ஏற்றுகொள்ளபட்ட  கல்வியாளர்களின்  விளக்கங்களை கொண்டும் அமைக்கப்பட்ட பாடத்திட்டம் .

பாடத்திட்டங்கள் :-

ஆறு மாத கால இப்பாடத் திட்டம்  இரண்டு Semester – ஆக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு Semester -ம் மூன்று மூன்று மாதமாக நடத்தப்படும்.

முதல் Semester :- 3 Month

1.அரபி மொழிப் பாடம் 

-மக்கா உம்முல் குரா பல்கலை கழகத்தின் ஆரம்ப அரபி மொழி புத்தகத்தில் இருந்து நடத்தப்படும் பாடத்திட்டம் –

இதன் மூலம் அடிப்படை அரபி மொழியின் கல்வி அறிவை பெற முடியும் .

2.அகீதா தஹாவிய்யா 

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை கொள்கைகள்  எளிய முறையில் தொகுக்கப்பட்டு  அனைத்து தரப்பு மார்க்க கல்வியாளர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்ட புத்தகம் 

-சிறந்த கல்வியாளர்களின் விளக்க குறிப்புகளோடு இப்பாடம் அமையும்-

3.சூரத்துல் ஹுஜ்ராத் விளக்க உரை 

இஸ்லாமிய மார்கத்தின் அடிப்படை சட்டங்களையும் முக்கிய ஒழுக்கங்களையும்  உள்ளடக்கிய சூரத்துல் ஹுஜ்ராத் விளக்க உரை 

-ஏற்றுகொள்ளபட்ட குர்ஆன்  விரிவுரையாளர்களின் விளக்க குறிப்புகளோடு இப்பாடம் அமையும் –

 இரண்டாம் Semester :- மூன்று மாதம்

1. அடிப்படை தஜ்வீத் சட்டங்கள் 

-மக்கா உம்முல் குரா பல்கலை கழகத்தின் ஆரம்ப தஜ்வீத் சட்டங்கள் புத்தகத்தில் இருந்து நடத்தப்படும் பாடத்திட்டம் –

2. உசூலுச் சுன்னா 

ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்வில் தெரிய வேண்டிய மார்க்கத்தின்  அனைத்து துறைகளையும்  தெளிவான  முறையில் எடுத்துக்கூறும் பிரசித்தி பெற்ற கல்வியார்களில்  ஒருவரான இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களின் முக்கிய புத்தகம் 

3.சூரத்துல் கஹ்ஃப் விளக்க உரை 

ஏற்றுகொள்ளபட்ட விரிவுரையாளர்களின் விளக்க குறிப்புகளோடு இப்பாடம் அமையும் .

வகுப்பு நடத்தப்படும் முறை :-

*ஒவ்வொரு மாணவருக்கும் Student ID card வழங்கப்பட்டு அவர்களின் Attendance  கண்காணிக்கப்படும் .

*பாடத்திட்டத்தின் புத்தகங்கள்  அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் .

*6 மாதத்தின் முடிவில்  அல் மனாரின் சார்பாக மாணவர்களின் மதிப்பெண்  அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.

*வகுப்புகளுக்கு முன்னால் வரவிருக்கும் பாடத்தின்  பாடங்களும் குறிப்புகளும் மாணவர்களுக்கு E-Mail மூலமாக  அனுப்பப்படும் .

*மாதம் ஒருமுறை மாதத் தேர்வு நடத்தப் படும் .

*நடத்தப்படும் வகுப்புகளுடைய  Audio மாணவர்களுக்கு  அனுப்பப்படும்.

*வகுப்புகள் தொடர்ச்சியாக இடைவெளிகள் இல்லாமல் நடத்தப்படும் இன்ஷா அல்லாஹ்.

குறிப்புகள் :- 

* இன்ஷா அல்லாஹ் இந்த மாதம் இறுதி வாரம் 27-02-2015 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு சரியாக முதல் அறிமுக வகுப்பு அல்மனார் பரஹா சென்டரில் தொடங்கும் , 

-யார்  27-02-2015 -அன்று இன்ஷா அல்லாஹ் நடக்கவிருக்கும்முதல் வகுப்பில்  கலந்து கொண்டார்களோ அவர்களே இந்த பாடத் திட்டத்தில் தங்களை இணைத்து  கொள்ள முடியும் –

 -முன் பதிவு செய்தவர்கள் – 27-02-2015 -அன்று  நடக்கவிருக்கும் வகுப்பில்  கலந்து கொள்ள முடியவில்லை என்றால் தகுந்த காரணம்  வகுப்பின் ஆசிரியருக்கு தெரிவிக்க வேண்டும் , இல்லை என்றால் அவர்களாலும் இந்த வகுப்பை தொடர முடியாது –

* வகுப்புகளில்  தவறாமல் கலந்து கொள்வது அவசியம் ,

*நேரம் தவறாமல் மாணவர்களின் வருகை அமைய வேண்டும் ,

Advertisement

Close