அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற மரத்தான் போட்டி!

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களுக்கு இன்று காலை 7.00 மணியளவில் மரத்தான் போட்டி நடைபெற்றது .இந்த மரத்தான் போட்டி காதிர் முகைதீன் கல்லூரி முதல் துவங்கி ராஜாமடம் வரை நடைபெற்றது. மொத்தம் 6km நடைபெற்றது .இதில் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் 25 பேர் கலந்து கொண்டனர் .

இதில் முதலாம் ஆண்டு B.A.Eco படிக்கும் மாணவர் இளையராஜா அவர்கள் முதல் இடம் பிடித்தார்கள் .இரண்டாம் இடம் வெண்ணிலவன் (3rd year B.Com),முன்றாம் இடம் சரத்குமார் (2nd year B.Sc ZOOLOGY) பிடித்தனர் .வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் விளையாட்டு விழா அன்று பரிசுகள் வழங்கப்படும் .

மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துகளையும் ,பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் . 

  

Advertisement

Close