Advertisement

' />

அதிரை கடைத்தெருவில் பைக் பார்க்கிங் செய்ய இடமில்லாமல் மக்கள் அவதி!

அதிரையில் தினமும் மிக மிக பரபரப்பான பகுதியாக விளங்குவது கடைத்தெரு. மீன் மார்க்கெட்டுக்கு வருபவர்களாக இருக்கட்டும், கடைகளுக்கு வருபவர்களாக இருக்கட்டும் அனைவரும் தங்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். பெரும்பாலானோர் தக்வா பள்ளி அருகே தான் தங்கள் வாகங்களை நிறுத்தி வருகின்றனர். அனால் தற்போது தக்வா பள்ளி அருகேயும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லை. அதிரையில் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி விட்டதால் கடைத்தெருவில் இரவு நேரங்களில் மிகவும் வாகன நெறிசலாகவே காணப்படுகிறது.

தங்கள் கடைகளின் வாசல்களில் பைக்குகளை நிறுவதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி கடைக்காரரர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே தகராறுகளும் ஏற்படுகின்றன.

இதனை கருத்தில் கொண்டு அதிரை கடைத்தெருவிற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement

Close