தஞ்சை மீனாட்சி மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்று!

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைக்கு தேசிய அளவிலான என்.ஏ.பி.எச் (தேசிய மருத்துவமனைகள், உடல் நல மையங்கள் வாரிய தரச் சான்று) தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

என்.ஏ.பி.எச் எனப்படும் தேசிய மருத்துவமனைகளுக்கான அங்கீகார அமைப்பு நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகள், அவசர கால மேலாண்மை, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் தகுதி, மருத்துவ உபகரணங்களின் தரம், சுகாதாரம், மருத்துவப் பதிவேடுகள் பராமரிப்பு, ஆய்வக வசதிகள், பொதுமக்களுடனான நல்லுறவு, நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்ய சுமார் 600-க்கும் அதிகமான தரப் பரிசோதனைகளை வகைப்படுத்தியுள்ளது. இந்தப் பரிசோதனைகளை நிறைவு செய்யும் மருத்துவமனைகளுக்குப் பல்வேறு விதமான ஆய்வுகளுக்குப் பின்பு என்.ஏ.பி.எச் தரச் சான்று வழங்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள சுமார் 4 லட்சம் மருத்துவமனை மற்றும் உடல் நல மையங்களில் 259 மருத்துவமனைகள் மட்டுமே என்.ஏ.பி.எச் தரச் சான்று பெற்றுள்ளன.

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையை 2 கட்டங்களாக ஆய்வு செய்த என்.ஏ.பி.எச் குழுவினர் அதன் தரத்தை உறுதி செய்யும் வகையில் என்.ஏ.பி.எச் தரச் சான்று வழங்கியுள்ளனர்.

திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மட்டுமே என்.ஏ.பி.எச். தரச் சான்று பெற்ற மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close