மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற PFI கொடியேற்று விழா நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

மல்லிப்பட்டினம் 17-02-214 அன்று பாப்புலர் ப்ரண்ட் கொடியேற்று நிகழ்ச்சி நடைப்பெற்றது.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா 1989 – 1990 காலக்கட்டங்களில் தோற்றுவிக்கப்பட்டு கடந்த 17-02-2007ஆம் ஆண்டு மூன்று மாநிலங்கள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாக செயல்பட தொடங்கியது அதன் விளைவுதான் இன்று 23 மாநிலங்களில் சிறப்பான பணிகளை செய்து வருகிறது.இந்த அமைப்பு அறிவிக்கப்பட்ட நாளான 17-02-2007 இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பித்து வருகின்றனர் இந்த நாளில் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் பல விதமான நிகழ்சிகளை நடத்திவருகின்றனர் அதன் ஒரு பகுதியாக மல்லிப்பட்டினத்தில் இன்று கொடியேற்று நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மல்லிப்பட்டினத்தில் இரண்டு இடங்களில் பாப்புலர் ப்ரண்ட் கொடியேற்று நிகழ்ச்சி நடைப்பெற்றது காயிதேமில்லத் நகரில் உமர் யூனிட் தலைவர் முஹம்மது ரபிக் அவர்களும்,பேருந்து நிலையத்தில் மல்லிப்பட்டின SDPI-ன் நகர அமைப்பாளர் முஹைதீன் பிச்சை அவர்களும் கொடியேற்றி சிறப்பித்தனர்.

இந்த விழாவில் பொதுமக்களும்,பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்த்யாவின் செயல் வீரர்களும் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Advertisement

Close