Adirai pirai
posts

மொம்மாத்மாவும் ஆமாத்மாவும் – அதிரை பெண்களின் கற்பனை பேச்சு!

நம்மூர் பெண்கள் ஒருவருக்கொருவர் அன்றாட ஊர், நாட்டு நடப்புகளுக்கு நம்மூர் வட்டார சொல் வழக்கில் உரையாடிக்கொண்ட உரையாடலை இங்கு உங்களின் பார்வைக்காக‌ வழங்கப்படுகிறது. இதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் ஒரு கற்பனைப்பாத்திரத்திற்காக‌ மட்டுமே இது யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல.

மொம்மாத்மா : அஸ்ஸ‌லாமு அலைக்கும் என்னாவுளே ஒரு வாரமா ஆளேயே கண்மாசியாக்காணோமே எங்கவுளே போயிருந்தா?

ஆமாத்மா : ஒரு வாரத்துக்கு முன்னாடி களரிகாரவூட்டுக்கு சாப்பாட்டுக்கு போயிட்டு வந்ததுலேர்ந்து ஒட‌ம்பு ச‌ரியில்லெ கை,கால் க‌டுப்பு, கொட‌ப்பெற‌ட்டு ஓங்கார‌மா ஈந்திச்சி.

மொம்மாத்மா : அப்புற‌ம் என்னா செஞ்சா? செந்தூர‌ம் வாங்கி தேன்லெ கொழச்சி சாப்புட‌ வேண்டிய‌து தானே?

ஆமாத்மா : இல்லெ உளே அதெல்லாம் இப்பொ எங்கே கேக்குது? ஆட்டோ புடிச்சி ஆஸ்ப‌த்திரி போய் ஒரு ஊசியெ போட்டுட்டு வ‌ந்தா தான் ச‌ரியாவுது. இப்பொதான் அல்ஹ‌ம்துலில்லாஹ் உடம்பு கொஞ்ச‌ம் தேவ‌லெ.

மொம்மாத்மா : உங்கூட்டு கார‌வொ எப்பொ வ‌ர்ராஹ்ஹ‌?

ஆமாத்மா : அவ்வொ இப்பொ வ‌ர்ர‌த்துக்கு கூட‌ ஆசையாத்தான் ஈக்கிறாஹ‌. ஆனால் அவ்வொ அக்கச்சியா மாருவொளுக்கு ஊடு க‌ட்டிக்கிட்டு ஈக்கிற‌துனாலெ ப‌ண‌ங்காசு தேவையும் த‌லைக்கு மேலெ ஈக்கிது அவ்வொளுக்கு. அத‌னால் இந்தவர்ரேன், அந்தவர்ரேன்டு சொன‌க்கிகிட்டு ஈக்கிறாஹ‌. அல்லாஹ் தான் அவ்வொ க‌ஷ்ட‌த்தெ நீக்க‌னும்.

மொம்மாத்மா : பாவம் அவ்வொ என்னாதான் செய்வாஹ‌? ஒத்த‌ந்த‌னிய‌ன். ரெண்டு மூனு அக்க‌ச்சியாமாருவொளோட‌ பொற‌ந்துட்டு அக்க‌ச்சியா மாப்ளெயெளுவொ எல்லாம் ந‌ல்லா ச‌ம்பாதிச்சிக்கிட்டு வ‌ச‌தியா ஈந்தாலும் இவ்வொ தான் ஊடு க‌ட்டி த‌ர‌னும்டு எதிர்பார்த்துக்கிட்டு உக்காந்துகிட்டு ஈக்கிதுவோ என்ன‌த்தெ சொல்ற‌து?

ஆமாத்மா : இப்ப‌டி ந‌ம்மூர்லெ பொம்புளெ புள்ளையளுவொலுக்கு ஊடு க‌ட்டி கொடுக்கிற‌ ப‌ழ‌க்க‌ம் ஈக்கிற‌துனாலெ அவ்வொளுவொ மாதிரி ஆளுவொளுக்கு இப்ப‌டியே கால‌ம் வெளிநாட்டுலேயே க‌ழிஞ்சிரும் போலெ ஈக்கிது. யார்ட்டெ சொல்லி அழுவுற‌து சொல்லு? அல்லாஹ் தான் ந‌ம்ம‌ளுக்கு வ‌ச‌திவாய்ப்பெ த‌ர‌னும்.

மொம்மாத்மா : அது ச‌ரி. ந‌ம்மூர்லெ அடிக்க‌டி ஆக்ஸிடெண்டு ந‌ட‌க்குற‌துனாலெ ஒ மொவ‌னுக்கு இப்பொவெல்லாம் மோட்டார் சைக்கிளு வாங்கி கொடுத்துடாதெ. பய‌லுவொ க‌ண்ணுமூக்கு தெரியாம‌ ரோட்லெ கண்ணாபிண்ணான்டு வ‌ண்டி ஓட்ரானுவொ…

ஆமாத்மா : எம்புள்ளெ அப்ப‌டியெல்லாம் வாங்கி கேட்டு பாடுப‌டுத்த‌ மாட்டான். அவ‌னுக்கு ந‌ம்மூட்டு நெலெமெ நல்லாத்தெரியும்ளே.

மொம்மாத்மா : இன்னொ ஒன்னும் சொல்றேன் கேட்டுக்க‌டீ. ஒ மொவ‌ன் ந‌ல்லா படிக்கிற‌ புள்ளையா ஈக்கிறான். அதுக்குள்ளெ அவ்வோ கேக்குறாஹ இவ்வோ கேக்குறாஹண்டு யாரு ஊட்டுக்கும் இப்பொ முடிவு கொடுத்துடாதே. அவ‌ன் நல்லா மேல்ப‌டிப்பு ப‌டிச்சி உள்ளூர்லேயே உத்யோகம் இல்லாட்டி வியாபாரம் செய்யனும். அவ‌ன் வாப்பா மாதிரி வெளிநாட்லெ போயி வருசகணக்கிலெ கடந்துக்கிட்டு க‌ஷ்ட‌ப்ப‌ட‌க்கூடாது பாத்தியா?

ஆமாத்மா : ஆமாவுளே நீ சொல்ற‌து நெச‌ம் தான். சின்ன‌புள்ளையிலேயே பொண்ணு பேசி வ‌ச்சி சீரு,சீராட்டுண்டு கொடுத்து அதுவொ எதிர்கால‌த்தை சீரழிச்சிர்ராங்கெ நம்மூர்லெ. எம்ம‌வ‌னும் அதுக்கெல்லாம் இப்பொ ஒருகால‌மும் சம்ம‌திக்க‌மாட்டான். அவ‌ன் ஆசைப்ப‌டி ந‌ல்லா ப‌டிக்க‌ட்டும்வுளே. அவ்வொ வாப்பாவுக்கும் அதுதான் ஆசை.

மொம்மாத்மா : செத்த‌ நேர‌ம் இரிவுளே ம‌ழெ வ‌ர்ர‌ மாதிரி ம‌ப்பும் ம‌ந்த‌ர‌முமா ஈக்கிது. மெத்தையிலெ முறுக்கு காய‌ப்போட்டிக்கிறேன், துணிமணி வேறெ காயுது. அதை எடுத்து வச்சிட்டு வ‌ந்துர்ரேன்.

ஆமாத்மா : ஈக்கிறேன் போயிட்டு வாங்கெ. (வந்ததும்) சரி நோம்பு வருதெ மாவு இடிச்சாச்சா உங்கூட்லெ?

மொம்மாத்மா : மாவு இடிக்கிற‌துக்கு முன்ன‌ மாதிரி ஆளு எங்கவுளே கெடெக்கிது? காசு,ப‌ண‌ம் பொழ‌க்க‌ம் எல்லார்ட்டையும் வ‌ந்திரிச்சி. அதுனாலெ அவங்க‌ள்ளெ நெரையா பேர் மாவு இடிக்கிற அப்புறம் ஊட்டு வேலெ செய்யிற‌ தொழிலையெ உட்டுட்டாளுவொ தெரியுமா? காலம் மாறிப்போச்சுவுளே…

ஆமாத்மா : ஆமாவுளே நீ சொல்ற‌து நெச‌ம் தான். இப்பொ எல்லாத்துக்கும் ஆளு பத்தாக்கொறையா ஈக்கிற‌துனாலெ எல்லா வேலையெலுவொலையும் நாம‌தான் செய்ய‌னுமா ஈக்கிது என்னா செய்ய‌ச்சொல்றா?

மொம்மாத்மா : முன்னாடியெல்லாம் யாரு ஊட்லெ அரிசி வெலெக்கி வாங்குனோம்? நம்ம‌ தோப்புதொற‌வுலேர்ந்து வ‌ர்ர‌ நெல்லை ப‌த்தாய‌த்துலெ போட்டு கொஞ்ச‌ம்,கொஞ்ச‌மா எடுத்து குத்தி அரிசியாக்கி சாப்புட்டுக்கிட்டு ஈந்தோம். இப்பொ எத‌ர்கெடுத்தாலும் க‌டைத்தெருலெ போயி நிக்க‌னுமாயீக்கிது.

ஆமாத்மா : ச‌ரிவுளே இன்னெக்கி சாங்கால‌ம் அஸ‌ர் தொழுதுட்டு நாமெ ஹதீதுகார  ஊட்டுக்கு போவ‌லாமா? வ‌ர்ரியா?

மொம்மாத்மா : நானும் போக‌னும்டு நெனெச்சிக்கிட்டு ஈந்தேன் நீனும் க‌ரெக்டா கூட்புட்டுட்டா….

ஆமாத்மா : நோம்பு வ‌ர்ர‌துனாலெ அது வ‌ர்ர‌துக்கு முன்னாடியே நமக்கும்,புள்ளையெலுவொலுக்கும் துணிம‌ணி எடுத்து த‌ச்சிட்டா பெரிய‌ வேலெ முடிஞ்ச‌மாதிரி. நோம்பு நேர‌த்துலெ குர்’ஆன் ஓதுர‌து ம‌த்தெ அம‌ல்க‌ளை செய்ய‌லாம் இல்லையா?

மொம்மாத்மா : ஆமாவுளே நானும் அதைத்தான் நெனெச்சிக்கிட்டு ஈந்தேன். அதுனாலெ துணி,ம‌ணிய‌லுவொலே இப்பொவே த‌க்க‌ கொடுத்துட‌ வேண்டிய‌து தான். ந‌ல்ல‌ வேளைக்கி நீ ஞாப‌க‌ம் காட்டுனா அதெ..

ஆமாத்மா : போன‌ நோம்புலெ ந‌ம்ம‌ தெருவுலெ ஈந்த‌ எவ்ளோ பெரியமனுசவோ மவுத்தா போயிட்டாங்க‌ பாத்தியா? அல்லாஹ் தான் ந‌ம்மளுக்கு அடுத்த‌ நோம்பும் கெடெக்கிற‌துக்கு உத‌வி செய்ய‌னும்.

மொம்மாத்மா : நோம்பு நேர‌த்துலே நெறையா ஏழெ பாலைய‌ங்க‌ள் உத‌வி கேட்டு வ‌ரும். அதுக்கு இப்பொவே காசு, ப‌ண‌ம் மாத்தி வ‌ச்சிக்கிட்ட‌ ரொம்ப‌ ச‌வுரியாமா ஈக்கிம். அப்பொ சில்ல‌ரை இல்லாம‌ க‌ஷ்ட‌ப்ப‌ட‌க்கூடாது பாரு? அதுனாலெ தான் சொல்றேன்.

ஆமாத்மா : ந‌ல்ல‌வேளெக்கி இப்பொவே ஞாப‌க‌ம் காட்டுனா நீ…கையிலெ வச்சிக்கிற பணத்தை எடுத்திக்கிட்டு போயி இப்பவே மாத்தி சில்லரைகாசெ வச்சிக்கிட வேண்டியது தான். ச‌ரிவுளே! புள்ளைய‌ளுவோ ஸ்கூல் உட்டு வந்துரும்க‌ள். நான் இப்பொ கெழ‌ம்புறேன். இன்ஷா அல்லாஹ் அஸ‌ரு தொழுவிட்டு ரெடியா இரி. நாமெ ஹ‌தீது கார‌ ஊட்டுக்கு ஒன்னா போவ‌லாம். சரியா..வ‌ர‌ட்டா….

மொம்மாத்மா : எங்கூட்லெ மொள‌வு த‌ண்ணி சாப்பாடு தான். இன்னெக்கி. சாப்புட்டுட்டு கொஞ்ச‌ம் சாஞ்சி எழும்புறேன். அஸ‌ர் தொழுவிட்டி வெள்ளனமே வந்துரு. ந‌ம்மூட்லெ தேத்த‌ணி குடிச்சிட்டு கெள‌ம்ப‌லாம் ச‌ரியா? போயிட்டா வாவுளே…..

மேற்க‌ண்ட‌ உரையாட‌லில் ஏதேனும் குறைக‌ள், த‌வ‌றுக‌ள் இருப்பின் பின்னூட்ட‌ம் மூல‌ம் அறிய‌த்தாருங்க‌ள். திருத்திக்கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

Courtesy: ADIRAI NIRUBAR

Advertisement