இஸ்லாமிய சிறுவர்களை சீரழிக்கும் கார்ட்டூன் சேனல்களும் வீடியோ கேம்களும்

தற்பொதைய கால கட்டத்தில் தொ(ல்)லைக்காட்சி இல்லாத வீடுகளைப் பார்ப்பதே அறிதாக மாறிவிட்டது. டி.வி. இல்லாத வீடுகளில் கூட தற்பொழுது சிறுவர்கள், குழந்தைகள் கார்ட்டூன் படங்கள் பார்க்கவும் வீடியோ கேம்கள் விளையாடவும் தொலைக்காட்சிகள் வைக்கப்படுகிறது. பல்வேறு கட்டங்களில் பல விதமான விழிப்புணர்வு கட்டுரைகளை அதிரை பிறை நேயர்களுக்கான் வழங்கிவருகிறோம். அந்த வகையில் சிறுவர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களான இவை இரண்டின் விளைவிகளைப் பற்றியும் தீங்குகளைப் பற்றியும் தான் இந்த கட்டுரையில் பார்க்கவுள்ளோம்.

கார்ட்டூன் சேனல்களால் வரும் விளைவுகளும் தீங்குகளும்:
சிறுவர்களின் மனதை கவர வேண்டும் என்ற முக்கிய நோக்கில் எடுக்கப்படுவது தான் கார்ட்டூன் படங்களும் அட்வென்சர்ஸ் என்று சொல்லக்கூடிய சாகச படங்களும் ஆகும். தொலைக்காட்சிகளில் சிறுவர்கள் பார்ப்பதற்க்காகவே தனி சேனல்கள் இன்றைய காலக்கட்டத்தில் துவங்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கு நன்மையை போதிக்க வேண்டிய இந்த சேனல்கள் அதை மறந்து சிறுவர்கள் மத்தியில் பிரபலமடைவதை மட்டுமே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன. அவர்கள் தங்கள் சேனல்களில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் யாவும் நடைமுறைக்கு மாற்றமான கார்ட்டூன், மாயாஜால மற்றும் சாகச படங்களை ஒளிபரப்புகின்றன. வெறும் சாகசத்தையும் மாயாஜாலத்தை மட்டும் கதைக் கருவாக கொண்டு இயக்கப்படும் இந்த படங்களை பார்க்கும் சிறுவர்களின் பிஞ்சு மனதில் நஞ்சு விதைக்கப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு பவர் ரேஞ்சர்ஸ் என்ற சாகச தொடர் கார்ட்டூன் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி சிறுவர்கள் மத்தியில் பிரபலமானது. அதிரை சிறுவர்களும் அந்த சமயத்தில் தெருக்களில் அந்த சாகச தொடரில் வருவதைப் போன்றே சப்தமிட்டுக்கொண்டும் சாகசம் நிகழ்த்திக் கொண்டும் தெருக்களில் அலைந்துக் கொண்டும் இருந்தனர். இதன் விளைவு சில மாதங்களிலேயே தெரிந்தது, சென்னையில் உள்ள ஒரு சிறுவன் தன் முகத்தில் முகமூடியை மாட்டிக்கொண்டு வீட்டு மாடியில் இருந்து கிழே எறியும் நெருப்பில் விழுந்து உயிர்விட்டான் என்பது சில வருடங்களுக்கு முன் செய்திகளில் நாம் அறிந்ததே.

இப்பொழுது ஒரு சில கார்ட்டூன் சேனல்களில் மாற்றுமத கடவுள்களை ஹீரோக்களாக வைத்து எடுக்கப்பட்ட கார்ட்டூன் தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதை இஸ்லாமிய சிறுவர்களும் விரும்பி பார்க்கின்றனர். இஸ்லாமிய இளம் பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் இது போன்ற கார்ட்டூன் படங்கள் அனைத்தும் யூதர்களின் சூழ்ச்சியே. சமீபத்தில் நமதூரில் ஒரு சிறுவன் தன்னுடைய நண்பன் ஒருவனிடம் மாற்றுமத கடவுள் ஒருவரின் பெயரை கூறி அவர் காப்பாற்றுவார் என்று கூறினான். இதை செவியுற்று அதிர்ச்சியடைந்த நான் அந்த சிறுவனிடம் இதை உனக்கு யார் சொன்னது என்று கேட்டபோது தான் ஒரு கார்ட்டூன் படத்தில் வந்த கதாபாத்திரத்தை கூறியதாக அவன் தெரிவித்தான். இவை அனைத்தும் இஸ்லாமிய சிறுவர்களின் மனதில் ஈமானை பறிக்க வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்படுவது தான்.

பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் மேற்கூற்ப்பட்ட மோசமான சேனல்கள் மற்றும் தொடர்களை பார்த்தால் கண்டிப்பதோடு மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் டிஸ்கவரி, நேஷனல் ஜியாக்ரஃபி போன்ற அறிவை வளர்க்கக் கூடிய ஆக்கப்பூர்வமான, அறிவியல் பூர்வமான பல சேனல்கள் பார்க்க அறிவித்த வேண்டும்.

சிறுவர்களை குற்றவாளிகளாக மாற்றும் வீடியோ கேம்கள்:

தொலைக்காட்சிகளுக்கு அடுத்ததாக சிறுவர்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக வீடியோ கேம் திகழ்கிறது. பிள்ளைகள் வெயிலில் போய் அலைந்து திரிந்து விளையாடாமல் வீட்டுக்குள் பாதுக்காப்பாக விளையாடட்டுமே! என்ற எண்ணத்தில் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வீடியோ கேம்களை வாங்கிக்கொடுத்து விடுகின்றனர். வீடியோ கேம்களில் பல வகைகள் உண்டு, தொலைக்காட்சி மூலம் ப்லே ஸ்சேஸ்னில் விளையாடுவது, கணிணி மூலம் விளையாடுவது, செல் போங்கள் மூலம் விளையாடுவது.

இதில் பெரும்பான்மையான சிறுவர்கள் விரும்பி விளையாடும் கேம்கள் GTA VICECITY, SAN ANDREAS, GANGSTAR போன்றவைகள் தான். தத்ரூபமான காட்சிகளாளும், உண்மையான கேமரா எஃபெக்டுகளாலும் இந்த வீடியோ கேம்கள் சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்த கேம்களின் கதை என்னவென்றால் பணம் சம்பாதிக்க வேண்டும். அது எந்த வழியாக இருந்தாலும் சரியே அஃதாவது கொலை செய்து ஒருவரின் பணத்தை திருடலாம், ஆயுதங்களை கடத்தி பணம் சம்பாதிக்கலாம். இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு பணம் சேர்ப்பவன் தான் இந்த கேமின் ஹீரோ ஆவான். மேலும் இந்த கேம்களில் கூடுதல் வசதி ஒன்று உள்ளது, இதற்க்கென சீட்ஸ் (CHEAT CODES) என்று சொல்லக்கூடிய குறிச்சொற்க்கள் உள்ளன. அவை மூலம் சாலையில் செல்லக்கூடிய பெண்களை கவர்ந்து தனது காரில் ஏற்றிச்செல்லலாம். இந்த கேம்களை விளையாடும் போதே சாலைகளில் ஆபாச ஆடைகளை அனிந்துக்கொண்டு பெண்கள் அங்கும் இங்கும் திரிவார்கள். இதன் மூலம் இதை விளையாடும் சிறுவர்களின் மனதில் திருடுவதோ, கொலை செய்வதோ, பெண்களை கவருவதோ குற்றமில்லை என்ற கொடூர எண்ணம் விதைக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் ஜப்பானில் 17 வயது இளைஞன் ஒருவன் தொடர்ந்து சாப்பிடாமல் தூங்காமல் 21 மணிநேரம் ஒரே இருக்கையில் அமர்ந்து இந்த விடியோ கேம்களை விளையாடி மரணமடைந்தான்.

அமெரிக்காவில் 6ம் வகுப்பு படிக்கும் சிறுவன் பள்ளியில் தன்னுடைய சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுட்டு கொலை செய்து அவர்களின் பணத்தை எடுத்துள்ளான். பள்ளியின் கண்கானிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சியை கண்ட அந்நாட்டு போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்ததில் அவன் கூறிய பதில்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “அவன் GTA VICE CITY என்ற கேம் முழுவதையும் விளையாடி முடித்து விட்டானாம், அடுத்த பதிப்புக்கான கேம் சி.டி யை வாங்குவதற்க்கு அவனிடம் பணம் இல்லையாம், இதனால் அந்த சிறுவன் அந்த கேமில் உள்ளது போலவே கோர முடிவை எடுத்திருக்கிறான்.

இந்த வீடியோ கேம்களால் சிறுவர்கள் தங்கள் பொன்னான காலத்தை ப்ரௌசின் சென்டர்களிலும், வீட்டில் உள்ள கணினிகளிலும் தங்கள் செலவிடுகின்றனர். இதுபோன்று சின்னஞ்சிறு சிறுவர்களை குற்றவாளிகளாகவும் காமுகர்களாகவும் மாற்றும் இது போன்ற வீடியோ கேம்களை விளையாடும் சிறுவர்களை பெற்றோர்கள் கண்டிக்க வேண்டும் என்று அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறொம்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

Close