அதிரையில் அ.தி.மு.க வினர் வெடி வெடித்து கொண்டாட்டம்! (படங்கள் இணைப்பு)

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி 96,516 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி மொத்தம் 1,51,561 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் என்.ஆனந்த் 55,045 வாக்குகள் பெற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றார். பாஜக வேட்பாளர் எம்.சுப்ரமணியம் 5015 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.அண்ணாதுரை 1552 வாக்குகளும் பெற்றனர். ‘நோட்டா’வுக்கு மொத்தம் 1919 வாக்குகள் கிடைத்தன. சுயேச்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி 1167 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதனை அதிரை பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க வேட்பாளர் வளர்மதி அவர்களின் வெற்றியை கொண்டாடும் விதமாக பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். மேலும் இந்த கூட்டத்தில் முன்னால் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த கூட்டத்தில் அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, அதிமுக நகர துணை.செயலாளர் தமீம், வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Close