DR.PIRAI-ஆஸ்துமாவுக்கு தற்காலிக சிகிச்சைகள்!

ஆஸ்துமா தொற்றுநோய் கிடையாது. யாருடன் நெருங்கி பழகினாலும் வராது. இது மூச்சுக் குழாயில் சுருக்கம் தந்து, மூச்சு விட சிரமம் தர்ற நோய்.  இத்தகைய பாதிப்புக்கு ஆளான வர் மூச்சு விட முடியாது. நெஞ்சு இறுக்கி பிடிச்ச மாதிரி இருக்கும். ஆஸ்துமா ஒரு வகை அலர்ஜி. உடம்பில் சுரக்கும்  சில ஹார்மோன் பிரச்சினைகளினால் அட்ரினல் என்கிற ஹார்மோன் குறைவாக சுரந்தால் அது மூச்சுக்குழாயை சுருக்கும். இது கவலைப்படக்கூடிய  நோய் அல்ல. இதை சரி செய்ய எளிய சிகிச்சை முறைகள் உள்ளது.
ஆஸ்துமாவை உண்டு பண்ணுகிற அலர்ஜி ஒவ்வொருத்தருக்கும் வேற மாதிரி இருக்கும். பொதுவான அலர்ஜியாக தூசு, புகை, கரப்பான்பூச்சியோட  கழிவு, சில பூஞ்சைகள், பூக்களோட மகரந்தம், பனி, வீட்டு பிராணி களின் உடலில் இருந்து உதிரும் முடி, ரொம்ப நாள் துவைக் காம வைத்திருக்கிற  தலையணை. வாசனை திரவியம், பெயின்ட், அய்ஸ்க்ரீம், நண்டு, கடலை உள்ளிட்ட சில உணவுப் பொருள்கள் என்று ஒவ்வொருவருக்கும் அவர் களது  உடல் நிலையை பொறுத்து அலர்ஜி வேறுபடும்.
ஆஸ்துமாவுக்கென தற்காலிக சிகிச்சைகளாக சிறப்பு மருந்துகள் இருக்கு. நேரே நுரையீரலுக்கு போய் உடனே சரியாகிற இன்ஹேலர் மருந்துகள் உள்ளது. சாதாரணமாக ஊசி போட்டு மருந்து, மாத்திரை சாப்பிட  வேண்டிய தில்லை. மருந்து எங்கே போகணுமோ அங்கேயே மருந்து இந்த இன்ஹேலர் மூலமா போவதால் பக்கவிளைவுகள் இல்லை. ஆஸ்துமாவுக்கு 2 வகை மருந்து உள்ளது.
ஒன்று ரிலீவர், மற்றொன்று ப்ரிவென்டர். ரிலீவர்ங்றது மூச்சுக்குழாய் சுருக்கத்தை மட்டும் சரி பண்றது.  எப்பெல்லாம் நமக்கு ரொம்ப அதிகமாக மூச்சுவிட முடியாம போகுதோ அப் பொழுது எடுத்து கொள்வது ரிலீவர். இதை அடிக்கடி எடுக்க கூடாது, எப்ப  முடியாம போகுதோ அப்ப தான் எடுக்க வேண்டும்.
ப்ரிவென்டர்ங்றது ஆஸ்த்மா பாதிப்பு பின்னாடி வராம கட்டுப்படுத்த எடுத்துக்குறது. இதை தினசரி எடுக்கணும். இது மூச்சுக்குழாயோட தடிப்பு வீக்கம்,  சுருக்கம் எல்லாத் தையும் சரி பண்ணும். இதை நாம கண்டிப்பா தினசரி எடுத்தே ஆகணும். இதுல அதிக நேரம் மூச்சுக்குழாயை விரிய வைக்கிற  மருந்துகள் மற்றும் மூச்சுக்குழாய் காயம், தடிப்பை சரி பண்ணுகிற ஸ்டிராய்டு மருந்துகள் எல்லாம் கலந்து இருக்கும்.
இன்ஹேலர் வழியா மருந்து எடுத்துக்குறதால ரொம்ப கம்மியான மருந்து தேவையான அளவு தான் உள்ளே போகும். இன்ஹேலர் மருந்து ரத்தத்தில்  உடல் பூரா சுற்றாமல் நுரையீரலுக்கே போவதால் பக்கவிளைவுகள் இல்லை. ரிலீவர் மற்றும் பிரிவென்டர் சிகிச்சை முறைகள் ஆஸ்துமாவுக்கு  தற்காலிக சிகிச்சை முறைகள் தான். நிரந்தர தீர்வுக்கு மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சிகிச்சை பெற வேண்டும் என்கின்றனர்  மருத்துவர்கள்.

Advertisement

Close