இந்திய வீரருக்கு தண்ணீர் கொடுத்து மனிதாபிமானத்தை நிலைநாட்டிய பாகிஸ்தான் வீரர்!

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலககோப்பை போட்டிகள் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ரசிகர்களின் எதிர்பார்த்த மிக முக்கிய போட்டியான இந்தியா பாக்கிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9 மணியளவில் ஆஸ்திரேலியாவின் அலிலெய்டு மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி  பெற்றது.

இதனை அடுத்து இந்திய ரசிகர்கள் ஆரவாரத்துடன் வெற்றியை  கொண்டாடினர். பலரும் இதில் இந்திய அணியின் வெற்றியையும், விராட் கோலியின் சதத்தை பற்றியும் தான் பேசியிருப்போம். 

ஆனால் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸின் தேனீர் இடைவேளையில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்காக தண்ணீரை கொண்டு வந்த அந்த அணியின் மாற்று வீரர் (SUBSTITUTE PLAYER)  ஒருவர் விராட் கொஹ்லிக்கு தண்ணீரை வழங்கி மனிதாபிமானத்துடன்  நடந்துக் கொண்டார்.

நாம் தான் இந்தியா பாகிஸ்தான், பரம எதிரிகள் என்று கூறிக்கொண்டு உள்ளோம். ஆனால் இந்த பாகிஸ்தான் வீரர் எதிர் அணி வீரரான விராட்  கொஹ்லிக்கு தண்ணீர் வழங்கினார். இது போல் மதம் பாராமல், இனம் பாராமல் அனைவரையும்  நம்மவர்களாக நமது சகோதரர்களாக கருதினால் உலகம் ஒற்றுமை பெறுவது உறுதி.

ஏக்கங்களுடன் ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Advertisement

Close