அதிரையில் வேகமாக குறைந்து வரும் குளங்களின் நீர் மட்டம்! (படங்கள் இணைப்பு)

கடந்த பல வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது. இதனால் பல நாட்களாக வறண்டு கிடந்த நமதூர் நீர் நிலைகள் நிறம்பி காணப்பட்டன. இந்நிலையில் தற்போது கடந்த மாதம் முழுவதும் மழை பெய்யாமல் பகல் நேரங்களில் அதிக அளவில் வெயில் வாட்டி வருகிறது. இதனால் நமதூர் கரிசல்மணி குளம் மற்றும் ஆலடிக் குளங்களில் நீர் மட்டும் வேகமாக குறைந்து தரை மட்டத்திற்கு இறங்கி வருகிறது. இது போல் செடியன் குளம், மரைக்கா குளம், காட்டுக் குளம், செட்டியா குளம், மண்ணப்பன் குளம் ஆகியவற்றிலும் நீர் மட்டம் கிடு கிடுவென குறைந்து வருகிறது.

Advertisement

Close