அதிரையில் பலபலக்கும் புதிய சாலை! மக்கள் மகிழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

அதிரை பேருந்து நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை வரை புதிய சாலை அமைக்கும் பணிகளுக்காக ₹1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட கடந்த ஒரு மாதமாக அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அதிரையில் பழைய சாலையின் அகலத்தையும் உயரத்தையும் அதிகரித்து நல்ல தரமான சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதிரை பேருந்து நிலையம் முதல் ஆலடிக்குளம் வரையிலான சாலை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையினால் சேர்மன் வாடி, மெயின் ரோடு, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளின் தோற்றமே மாறியுள்ளது. தரமாக அகலமாக பலபலப்புடன் அமைக்கப்படும் இந்த சாலையில் இனி வாகன ஓட்டிகள் எந்த வித இடையூறுகள் இன்றி சுமுகமாக பயணம் செய்யலாம். மழைக்காலத்தில் தண்ணீர் சாலையில் தேங்காத வண்ணம் இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும்  அரசு No1 பள்ளி, பழஞ்செட்டித் தெரு பஸ் ஸ்டாப், இந்தியன் வங்கி, வண்டிப்பேட்டை ஆகிய பகுதிகளில் வேகத்தடைகளை அமைத்தால் விபத்துகளை தவிர்க்கலாம்.

Advertisement

Close