Advertisement

' />

மரண அறிவிப்பு! (ரைட்வேல்டு ஷேக் அவர்களின் தாயார்)

அதிராம்பட்டிணம் புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும் அப்துல் ரஹிம் அவர்களின் மனைவியும் உசேன் முஹமது அவர்களின் சகோதரியும் முஹம்மது இப்ராஹிம், அப்துல்லாஹ், செய்யது முஹம்மத், முகைதின் ஆகியோரின் மாமியாரும் அன்வர் , ரைட்வேல்டு ஷேக் ஆகியோரின் தாயருமான மஃஹமுதா அவர்கள் நேற்று (11-02-2015) இரவு வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் நல்லடக்கம் இன்று காலை 11 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக .

Advertisement

Close