அதிரை சுற்றுவட்டாரங்களில் ஆண்கள் இல்லாத வீடுகளை குறிவைக்கும் திருடர்கள்! பகீர் ரிப்போர்ட்!

அதிரை மற்றும் அதன் சுற்றியுள்ள ஊர்களான மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பல ஆண்கள் வெளிநாடுகளில் தங்கி சம்பாதித்து வருகின்றனர். எனவே இதனை வாய்ப்பாக வைத்துக்கொண்டு ஆண்கள் இல்லாத வீடுகளை தெரிந்து கொண்டு இரவு நேரங்களில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கும் சம்பவம் நடைபெறுகின்றது. மல்லிப்பட்டினத்தில் உள்ள ஒரு வீட்டில் இரு தினங்களுக்கு முன்பு கொள்ளையர்கள் கத்தியை காட்டி கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆகவே அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் உங்கள் பகுதியில் சந்தேகத்துக்கு உட்பட நபர் யாரேனும் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுங்கள்.  

எனவே தனியாக வீட்டில் இருக்கும் பெண்களே! நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது கதவு தட்டப்பட்டால் யார் என்று விசாரித்து கதவை திறந்து விடுங்கள். அந்நிய நபர்களை எக்காரணத்தைக் கொண்டும் வீட்டிற்க்குள் அனுமதிக்காதீர்கள்.

Advertisement

Close