அதிரை மக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

                         
அதிரையில் பல திருமணமான ஆண்கள் தன் மனைவியை விட்டும் தன் குடும்பத்தை விட்டும் பிரிந்து கடல் கடந்து செல்கின்றனர். அவர்கள் தனது குடும்பத்திற்காக கடல் கடந்து சென்று  உழைப்பதின் மூலமாக தனது குடும்பத்தாருக்கு  உங்கள் மீதுள்ள அன்பும், ஆசையும்  விலகிவிடும்.
இதனால் தங்கள் வீட்டு இல்லத்தரசிகள் பலர்  ஆண்கள் துணையின்றி தவிக்கின்றனர். இதனால். பல அசம்பாவிதங்கள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
இதனால் ஏற்ப்படும் விளைவுகள், பெண்கள் தங்களது செல் போனுக்கு ரீசார்ஜ் செய்வதாக இருந்தால் கூட  கடைக்காரரிடம் செல் போன் நம்பரை கொடுத்து EC செய்து விடுங்கள் என்று தங்கள் வீட்டு இல்லத்தரசிகள் இதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அந்த கடைக்காரரும், அந்த நம்பரை வைத்து பல கோள்மாறுகளை செய்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாக அதிரை இளைஞர்கள் ரீசார்ஜ் செய்யும் கடையில் பெண்களின் நம்பரை கேட்டு தவறாக பேசிவருகின்றனர். இதற்க்கு பெயர் தான் க_ல_தொ__பு என்று கூறப்படும். 
கடல் கடந்து சென்று நீங்கள் அங்கு வேதனைப்பட்டு மாதம் மாதம் செலவு பணம் அனுப்பிவைப்பதின் மூலமாக தங்கள் வீட்டு இல்லத்தரசிகள், இந்த பணமெல்லாம் வீட்டுச்செலவிற்க்கே போதாது என்று கூறுவதும் உண்டு. இதன் காரணமாக பல பெண்கள் வங்கி ஊழியர்களிடம் வட்டிக்கு பணம் எடுத்து, அப்பணத்தை செலுத்த முடியாமல் வட்டிக்காரனிடமும் இவ்வாறு ஆபாசமான முறையில் செயல்பாட்டு வருகின்றனர்.காரணம் ஆண்களே.
உங்கள் வீட்டு இல்லத்தரசிகளை நீங்கள் எந்நேரமும் கண்காணித்தவாரே இருக்க வேண்டும்.

இவ்வாறு பல அசம்பாவிதங்களை பற்றி எண்ணிக்கொண்டே போகலாம் …….

அசம்பவிதங்கள் நடந்த பிறகு யோசித்து ஒரு பயனுமில்லை. ஆகையால் 
வருமுன் காப்பதே சிறந்தது! 

Advertisement

Close