26வது முறையாக இரத்ததானம் செய்த அதிரையர்!

அதிரை நடுத்தெருவைச் சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் A. சாகுல் ஹமீது. சமூக ஆர்வலரான இவர் ‘மணிச்சுடர்’ இதழின் அதிரை நிருபராக செயல்பட்டு வருகிறார்.

இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து இரத்த தானம் செய்து வருகிறார். சென்னை அரசு மருத்துவமனையில் இன்று 26 வது தடவையாக இரத்தத்தை வழங்கி சாதனை புரிந்துள்ளார்.

இவரின் குருதிகொடையை பாராட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில் சான்றிதல் வழங்கி பாராட்டியது, மத்திய இணை அமைச்சர் E. அஹமது MP, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் MP, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்றிருப்பது குறிப்பிடதக்கது. மேலும் அதிரை லயன்ஸ் சங்கம் வழங்கிய குருதிக்கொடையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இரத்ததானம் வழங்குவதில் பிறருக்கு முன் உதரணமாக இருப்பதுடன் அவசரத்திற்கு இரத்தம் கேட்டால் தெரிந்தவர்களிம் தொடர்பு கொண்டு இரத்தம் பெற்று தருகிறார். இப்படி சேவை செய்து வரும் சாஹுல் ஹமீது அவர்களுக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisement

Close