திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள்! (EXCLUSIVE PHOTOS)

திருச்சியில் பிரபலமான கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக உள்ளது ஜமால் முஹம்மது கல்லூரி. இங்கு அதிரை, முத்துப்பேட்டை மற்றும் பல பகுதிகளில் உள்ள ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். நேற்றைய தினம் SELF FINANCEஇந்த கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கத்தில் நடைப்பெற்றது. இதில் அதிரை, முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம் போன்ற அனைத்து ஊர்களை சேர்ந்த மாணவர்களும் நெகிழ்ச்சியுடன் தங்களின் கல்விக்கான அங்கிகாரத்தை (பட்டத்தை) பெற்றுச்சென்றனர்.

இது போல் நேற்று முந்தினம் AIDED பிரிவு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா இங்கு நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதில் பட்டம் பெற்ற மாணவர்கள் எதிர்காலத்தில் சாதனை மன்னர்களாய் மின்னிட மனதார வாழ்த்துகிறது அதிரை பிறை.

Advertisement

Close