Advertisement

' />

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அஜ்மல் மீதான் தடை நீக்கம்!

விதிகளுக்கு புறம்பாக பந்து வீசியதால் தடைக்குள்ளான பாகிஸ்தான் பந்து வீச்சாளர் சாகித் அஜ்மலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஐ.சி.சி. நீக்கியுள்ளது.

முறைக்கு மாறாக பந்துவீசுகிறார் என்று நடுவர்கள் புகார் அளித்ததையடுதது பாகிஸ்தான் அணி வீரர் சாகித் அஜ்மலுக்கு ஐ.சி.சி. தடை விதித்தது. சுழற்பந்துவீச்சாளர்கள் 15 டிகிரிக்கு மேல் கையை வளைத்து பந்து வீசக் கூடாது என்று ஐ.சி.சி. விதி உள்ளது. ஆனால் அஜ்மல் 42 டிகிரி அளவுக்கு கையை சுழற்றி பந்து வீசியதாக கூறப்பட்டது.  கடந்த நவம்பர் மாதம் அஜ்மலுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த முதல் பரிசோதனையில் அவர் தேரவில்லை. 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர்   சக்லைன் முஷ்டாக், சாகித் அஜ்மலின் பந்து வீச்சை திருத்தும் பணியில் ஈடுபட்டார். இதையடுத்து கடந்த 24ஆம் தேதி சென்னை ராமச்சந்திரா பல்கலையில் உள்ள ஸ்போர்ட்ஸ் மெடிசின் மையத்தில் அவரது  பந்துவீச்சு முறை இரண்டாவது முறையாக சோதித்து பார்க்கப்பட்டது.  அப்போது அஜ்மலின்  பந்துவீச்சு விதிகளுக்கு உட்பட்டிருந்தது. இது குறித்து ஐ.சி.சிக்கு அறிக்கை அளிக்கப்பட்டதையடுத்து அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீங்கியுள்ளது. 

எனினும் அஜ்மலின் பந்துவீச்சை தொடர்ந்து கண்காணிக்குமாறு நடுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. . தடை நீங்கியதையடுத்து சாகித் அஜ்மல் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விகடன்

Advertisement

Close