ஆவூரில் 15,000க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்ட மாபெரும் தப்லீக் இஜ்திமா (படங்கள் இணைப்பு)

 ஆவூரில் 15000 மக்கள் ஒன்று திரண்ட மாபெரும் இஜ்திமா நேற்று மாலை மக்ரிப் தொழுகையுடன் நிறைவடைந்தது. வருடா வருடம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஏராளமான முஸ்லிம்கள் ஒரே பகுதியில் ஒன்று திரண்டு இஜ்திமா நடத்துவது வழக்கம். இதில் பல மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு நடைபெறுவதுடன் உலமெங்கும் ஜமாத் செல்பவர்கள் சந்திக்கும் ஒரு கூட்டமாகவும் இது இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கும்பகோணம் அருகே ஆவூரில் இந்த மாபெரும் இஜ்திமா நடைபெற்றது. இதில் பல மார்க்க அறிஞர்கள், 15000க்கும் அதிகமாக மக்கள் கூடினர். அதிரையில் இருந்து மட்டும் மொத்தம் 11 பேருந்துகள் மூலம் மக்கள் திரளாக சென்றனர். நேற்று இஜ்திமா முடிந்த பிறகு இவர்கள் அதே பெருந்துகளின் மூலம் ஊர் திரும்பினர்.

Advertisement

Close