Advertisement

' />

வெளி ஊர்களில் முஸ்லிம்களின் நிலை??

எனது உறவினர் சென்னையில் வாடகை வீடு தேடி வந்தார். வீட்டின் உரிமையாளரின் முதல் கேள்வி என்ன தெரியுமா??

நீங்கள் யார்?

எந்த ஊர்?

என்று கேட்பதற்கு மாறாக! 

நீங்கள் இஸ்லாமியரா ! என கேட்டனர்.

முதல் கேள்வியிலேயே முஸ்லீம்களுக்கு வீடு கொடுப்பதில்லை என்று கூறி விடைபெற்றனர் வீட்டின் உரிமையாளர்கள். இது தவறு என்று கூற வரவில்லை வீடு கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் நீ முஸ்லீம் என்கிற காரணத்தினால் வீடு இல்லை என்று கூறுவது நாகரீகமல்ல. இதற்கும் இவர்கள் காரணம் அல்ல.

சில செய்தி ஊடகம் மற்றும் சினிமா துறையை சார்ந்தவர்கள் முஸ்லீம்களை தவறாக சித்தரித்து இந்த சமுதாயத்தில் அவப்பெயர் ஏற்ப்படுதி இழிவுபடுத்துகின்றனர். இவர்களின் முஸ்லீம் விரோத போக்கினால் சில  மாற்று மத நண்பர்கள் இஸ்லாமியர்களை தவறாக விளங்கி இவ்வாறு நடந்துகொள்கின்றனர். அவர்கள் இஸ்லாமியர்களோடு  நண்பர்களாக பழகி இருந்தால் அவர்களுக்கு தெரிந்திருக்கும் 

முஸ்லிம்கள் யார்? 

அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

என்று. .

-முஹம்மது சாலிஹ்


Advertisement

Close