அதிரை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

அதிரை ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட மக்களின் கவனத்திற்கு…

தமிழகத்தின் அம்மா திட்டம் நாளையதினம் காலை 10 மணியளவில் ஏரிப்புறக்கரையில் உள்ள ரெட்ப்லஸ் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

இங்கு அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற மனு எழுதி பெற்றுக்கொள்ளலாம். மேலும் இங்கு புதிய ரேசன் கார்டுகளை பெறுவதற்கும், பழைய ரேசன் கார்டில் பெயர் மாற்றம் செய்யவும், பெயர் நீக்கம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும், பட்டா மாற்றம் செய்யவும், முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் அரசு உதவித்தொகை பெறுவதற்கும், இன்னும் அரசின் பல நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு இங்கு வந்து மனு எழுதிக்கொடுத்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Advertisement

Close