அதிரை காதிர் முகைதீன் பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்ச்சி!(படங்கள் இணைப்பு)

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 66 ஆம் ஆண்டு விளையாட்டு விழாவின் பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று (05-02-2015) மாலை 4.00 மணியளவில் பள்ளியின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக இன்று காலை விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் உதுமான் முகைதீன் அவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியினை  துவக்கி வைத்தார்கள். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை ஆசிரியர்  S.K.M.ஹாஜா முகைதீன், முன்னால் உதவி தலைமை ஆசிரியர் முஹம்மது ஹனீபா, முன்னாள் ஆசிரியர்கள் சீனிவாசன், உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

முன்னதாக அதிரை காவல்துறை உதவி ஆய்வாளர் திருமதி .பசுபதி அவர்கள் ஏற்றி வைற்ற ஒலிம்பிக் சுடரை விளையாட்டு வீரர்கள் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மைதானத்திற்கு கையில் ஏந்தியவாறு வந்தனர். 

இதனையடுத்து விளையாட்டு போட்டிகளை அதிரை காவல்துறை உதவி ஆய்வாளர் திருமதி. பசுபதி அவர்கள் துவக்கி வைத்தார்கள் .இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்,முன்னாள் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளுக்கும் நடைபெற்றது .  

இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் பூண்டி புஷ்பம் கல்லூரியின் உடற்கல்வி துறை தலைவர் முனைவர் சி. ராபர்ட் அலெக்ஸ்சாண்டர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள் .

இந்நிகழ்ச்சியில் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், முன்னாள் ஆசிரியர்கள் ,முன்னாள் மாணவர்கள் ,அதிரை வலைதள நிர்வாகிகள் ,பெற்றோர்கள், ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 


 

Advertisement

Close