அதிரை பேரூராட்சிக்கு அதிரை பிறையின் வேண்டுகோள்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

request-clipart-request-boxஅதிரை புதுத்தெரு வடபுறம் ஸ்டேட் வங்கி பின்னால் தெருவில் பல ஆண்டுகளாக ஆடு, மாடு தோல்கள் கருக்கக்கப்பட்டு வருகிறது. இந்த கழிவுகள் மக்கள் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் கொட்டுகின்றனர். இன்று பஜ்ர் தொழுதுவிட்டு அந்த வழியாக செல்லும் போது அந்த குப்பை தொட்டியில் உள்ள அந்த கழிவுகளை பல தரையில் கொட்டி அவற்றை குப்பை லாரியில் ஏற்றினார்கள்.

இந்த துர்நாற்றம் கிரானி மளிகை வரை அடிக்கின்றது. சாதாரன வாடை அல்ல. மிகவும் அருவறுக்கத் தக்க வாடை. அந்த துப்பரவு தொழிலாளர்கள் அதை எப்படி தான் அவற்றை அள்ளுகிறார்கள் என்று தொரியவில்லை. இதனால் அவர்களுக்கு கொடிய நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அந்த குப்பைகளை அப்புறப்படுத்திய பிறகும் அதை கீழே கொட்டியதால் தரையில் இருந்து மிகவும் கொடிய வாடை வருகிறது. மேலும் அந்த கழிவுகளை அள்ளிச்செல்லும் போது வண்டியில் இருந்து அந்த கழிவு நீர் சாலையில் வடிந்துக்கொண்டே செல்கிறது இதனால் கடைத்தெரு, போஸ்ட் ஆபிஸ் தெரு சாலையெங்கும் சில மணி நேரம் கெட்ட வாடை வருகிறது.

இதற்க்கு முதல் காரணம் தினமும் இந்த கழிவுகளை அள்ளாதது தான். இவற்றை தினமும் அள்ளினால் இவ்வளவு கழிவு சேராது.துர்நாற்றமும் குறைவாக இருக்கும். எனவே இதனை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் மட்டுமாவது தினமும் குப்பைகளை அப்புறப்படுத்தினால் மேற்கூறிய விளைவுகளை தவிர்க்கலாம். மேலும் குப்பை அள்ளும் தொழிலாளிகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் பேஸ் மாஸ்க், கை உரை உள்ளிட்டவை வழங்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

-அதிரை பிறை

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author