ஆம்பூர் கலவரத்தில் கைது செய்யப்பட்ட 118 இஸ்லாமியர்கள் விடுதலை!

Want create site? Find Free WordPress Themes and plugins.

21-1437467553-ambur-riot1-600ஆம்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 118 பேர், ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

பவித்ரா என்ற பெண்ணை காணவில்லை என்ற புகாரின் பேரில் ஷமீல் அகமது என்பவரி டம் ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காவல்துறையினர் தாக்கியதால் தான் ஷமீல் அகமது இறந்து விட்டதாகக் கூறி, கடந்த மாதம் 27-ம் தேதி ஆம்பூரில் கலவரம் ஏற்பட்டது. இதுதொடர்பாக பெய் ரோஸ் அகமது, சலீம், இம்ரான் அகமது, சையது முகைதீன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜாமீன் கோரி, வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, இவர்களையும் சேர்த்து மொத்தம் 118 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ‘‘எங்களுக்கும் ஆம்பூர் கலவரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ள நாங்கள் கடந்த 18 நாட்களாக சிறையில் வாடுகிறோம். இம்மாதம் முக்கியமான ரமலான் மாதமாகும். நோன்பு இருந்து வரும் நாங்கள் 18-ம் தேதி ரமலான் பண்டிகையை கொண்டாட வேண்டும். அதற்காக ஜாமீன் அளிக்க வேண்டும்’’ என்று கோரியுள்ளனர்.

இம்மனுக்கள், உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுக்கள் மீதான விசாரணையை 21-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் மனுதாரர்களின் மனுவுக்கு காவல்துறையினர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தர விட்டார்.

ஆய்வாளர் முன்ஜாமீன் மனு: இதற்கிடையே, ஷமீல் அகமது மரணத்துக்கு காரணமானவராகக் கூறப்படும் ஆம்பூர் காவல்நிலைய ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு மீதான விசார ணையை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஆர்.சுப்பையா உத்தரவிட்டார்.

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author