அதிரை அருகே விபத்து! ஒருவர் படுகாயம்

accdt

மல்லிப்பட்டினத்தை சேர்ந்த ஒருவர் பட்டுக்கோட்டை (பள்ளிகொண்டான்) வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். தீடீரென்று ஒரு லாரி அவரை  இடித்து சென்றது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார்.  உடனே அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவருக்கு உதவி செய்தனர். பிறகு மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த மற்றொருவர் வாகனத்தில் வந்து அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

விபத்தில் படுகாயமடைந்த அவர் தலைகவசம் அணிந்திருந்ததால் தலையில் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Close